இதயமே நொறுங்கிவிட்டது.. இலங்கை மக்களுக்காக என் குரலை பயன்படுத்துவேன்.. "மணிகே மகே" புகழ் யோஹானி
மும்பை: இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயமே நொறுங்கிவிட்டது என இலங்கை பாடகி யோஹானி கூறியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். புராண காலத்தில் இலங்கை பற்றி எரிந்தது போல் தற்போதும் பற்றி எரிவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். இலங்கையில் பிரதமராக இருந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி
மேலும் பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிலையில் இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு முன் வந்துள்ளது. தமிழக அரசின் நிவாரண பொருட்கள் வரும் 22 ஆம் தேதி கப்பலில் செல்கிறது. மொத்தம் 123 கோடி ரூபாய் கொண்ட நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படுகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி
அது போல் இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதி திரட்டி கொடுக்கும் திட்டத்தை அந்நாட்டு பாடகி யோஹானி முன்னெடுத்துள்ளார். இதற்காக நிதியுதவி அளிக்கும் படி அவர் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிகே மஹே ஹித்தே எனும் சிங்கள பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

ஹஸ்கி வாய்ஸ்
தனது ஹஸ்கி வாய்ஸ் மூலம் இளசுகளை முணுமுணுக்க வைத்தவர். தற்போது மும்பையில் இந்திய இசை கலைஞர்களுடன் இவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது பேட்டியில் கூறுகையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் நடக்கும் சம்பவங்களால் மனதுடைந்து போயுள்ளேன்.

மணிகே மகே ஹித்தே புகழ் யோஹானி
நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு நிதியுதவி மட்டும் அல்ல, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பது முக்கியம். எனது நாட்டு மக்களுக்கு உதவ எனது குரலை பயன்படுத்துவேன். என் நாட்டின் மீது அதிக பற்று வைத்துள்ளேன். நான் மும்பையில் இருந்தாலும் எனது குடும்பம், நண்பர்கள், என்னுடைய இசைக் குழுவினர் எல்லாம் இலங்கையில்தான் உள்ளனர். எனது தாய் நாட்டின் நலனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார் யோஹானி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications