சாப்பிடவில்லை.. மயங்கி விழுந்தார்.. சுஷாந்த் தற்கொலையால் அதிர்ச்சி.. சகோதரர் மனைவியும் திடீர் மரணம்!
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை காரணமாக அதிர்ச்சி அடைந்த அவரின் சகோதரரின் மனைவி நேற்று பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் நேற்று முதல் நாள் தற்கொலை செய்து கொண்டார். மர்மமான முறையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
மன அழுத்தம் காரணமாக இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இவர் பல்வேறு இந்தி படங்களில் நடித்தவர். கை போச்சே என்னும் இந்தி படத்தில் அறிமுகம் ஆனவர்.

விசாரணை செய்கிறார்கள்
இவரின் தற்கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். முக்கியமாக சுஷாந்த் சிங்கின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அதோடு சுஷாந்த் சிங்கின் காதலி என்று கருதப்படும் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடந்து வருகிறது. இன்னும் முழுமையாக சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.

மரணம் அடைந்தார்
நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை காரணமாக அதிர்ச்சி அடைந்த அவரின் சகோதரரின் மனைவி நேற்று பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் பெயர் சுஷா தேவி. பீகாரை சேர்ந்த இவர் தற்போது மும்பையில் இருக்கிறார். நேற்று சுஷாந்த் சிங் உடலை பார்த்ததும் அதிர்ச்சியில் இவர் மயங்கி விழுந்துள்ளார். அங்கேயே அவருக்கு இதய துடிப்பு அதிகம் ஆகியுள்ளது.

மோசமானார்
இந்த நிலையில் நேற்று மாலை சுஷா தேவி அதிர்ச்சி தாங்க முடியாமல் மரணம் அடைந்தார். இறுதி சடங்கு நிகழ்வின் போதே இவர் மரணம் அடைந்துள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலை செய்தி கேட்டதில் இருந்தே சுஷா சாப்பிடவில்லை. தூங்கவில்லை என்கிறார்கள். சுஷாந்த் சிங்கை சுஷாதான் அக்கா போல இருந்து கவனித்துக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சுஷாவின் திடீர் மரணம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அப்பா உடல்நிலை
இன்னொரு பக்கம் சுஷாந்த்சிங் தற்கொலையை தொடர்ந்து அவரின் அப்பாவின் உடல்நிலை தற்போது மோசம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளது. ஷாந்த் சிங் அப்பா கிருஷ்ணா குமார் சிங் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருக்கிறது. சுஷாந்த் சிங் அப்பா கிருஷ்ணா குமார் சிங் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருக்கிறது. அவர் ஏற்கனவே பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதயத்திலும் பிரச்சனை இருந்துள்ளது. தற்போது அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications