ரோஜா கூட அமைச்சராகிவிட்டார்.. ஆனால் 18 ஆண்டுகள் வீணாகிடுச்சே.. நக்மா வேதனை.. அடுத்த அதிரடி?
மும்பை: சம காலத்தில் தன்னுடன் நடித்த ரோஜா கூட எம்எல்ஏவாகி அமைச்சராகிவிட்டார், 18 ஆண்டுகளாக உழைத்தும் தன்னால் எந்த பதவியையும் பிடிக்க முடியவில்லையே என நக்மா தனது நெருங்கிய வட்டாரத்தில் வேதனை தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1990 களில் பலரது கனவுக்கன்னிகளாக இருந்த நடிகைகளில் நக்மாவும் ஒருவர். இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.திரைத்துறையில் ஜொலித்த நக்மாவுக்கு அரசியலில் ஈடுபட்டு மக்கள் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதற்காக அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பினார்.

நட்சத்திர நடிகை
இதனிடையே நட்சத்திர நடிகையாக இருந்த நக்மாவை தங்கள் கட்சியில் இணைத்து அவருக்கு 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்க பாஜக தூண்டில் போட்டது. ஆனால் அந்த ஆஃபரை நிராகரித்த நக்மா, காங்கிரஸ் கட்சியில் 2003 ஆம் ஆண்டு இணைந்தார்.

மகளிர் காங்கிரஸ்
அவர் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். மேலும் சில மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக, புதுவை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

மாநில பொறுப்பு
இதையடுத்து அந்த மாநில பொறுப்பு பறிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் தேர்தல் பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தலில் தனக்கு ஒரு இடத்தை காங்கிரஸ் தலைமை கொடுக்கும் என நம்பினார். பின்னர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் மகாராஷ்டிராவில் வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

நக்மா பெயர் இல்லை
அந்த பட்டியலில் நக்மா பெயரில்லை. இதனால் அவர் மன வேதனை அடைந்தார், 18 ஆண்டுகளாக இந்த கட்சிக்காக உழைத்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தான் எந்த விதத்தில் ராஜ்யசபா பதவிக்கு தகுதியானவர் அல்ல, தான் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதுதான் கட்சியில் இணைந்ததாகவும் சோனியா தனக்கு ராஜ்யசபா பதவியை கொடுப்பதாக வாக்குறுதி அளித்தும் கொடுக்கப்படவில்லை என்றும் தனது ட்விட்டரில் குமுறினார்.

வாக்குறுதி
இதனால் தற்போது அவர் வேறு ஏதேனும் கட்சிக்கு தாவி விடலாம் என்ற எண்ணத்தில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன, அவரை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள பாஜக முயற்சித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. பாஜகவுக்கு வந்தால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற வாக்குறுதியை சிலர் கொடுக்கிறார்களாம்.

டோட்டல் அப்செட்
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியான நாள் முதலே அப்செட்டில் இருந்து வரும் நக்மா, "எனது சமகாலத்து நடிகையான ரோஜா அரசியலுக்கு வந்த குறுகிய காலத்திலேயே எம்எல்ஏவாகி
அமைச்சருமாகிவிட்டார். ஆனால் நான் காங்கிரஸில் 18 ஆண்டுகளை வீணடித்துவிட்டேனே என நெருங்கிய வட்டாரங்களில் தனது வேதனையை கொட்டி வருகிறாராம்.












Click it and Unblock the Notifications