அம்பானி வீட்டு திருமண விழா! கூடவே வந்த வேலைக்கார பெண்ணை போட்டோ எடுத்தபோது தள்ளி போக சொன்னாரா ரஜினி?
மும்பை: பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு செல்லும் போது, ரஜினிகாந்த், தனது பணிப்பெண்ணை தள்ளி நிற்குமாறு கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் வகிப்பவரும் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரருமான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இவர்களது திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம், ஜாம் நகரில் கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், மெடா நிறுவனங்களின் தலைவர் மார்க் சூகர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் என சர்வதேச அளவிலான விவிஐபிக்கள் பலரும் பங்கேற்றனர்.
அதோடு, பாலிவுட் திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டோனி உள்பட பலரும் பங்கேற்றனர். திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்கள் மூன்று நாட்கள் களை கட்டியிருந்தது. அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேற்று சென்று இருந்தார். ரஜினிகாந்த் சாதரண டி ஷர்ட் அணிந்து கொண்டு மிக எளிமையாக சென்றது அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் பெரும்கவனத்தை ஈர்த்தது.
இதனிடையே, திருமண விழாவில் பங்கேற்க சென்ற ரஜினிகாந்த், அங்கு போட்டோ எடுக்கும் போது தனது குடும்பத்தினருடன் அழைத்து வந்த பணிபெண்ணை ஓரமாக நிற்கும் படி கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் திருமண விழாவில் பங்கேற்க வருகை தந்து கொண்டு இருக்கிறார்.
அப்போது ரஜினி குடும்பத்தினருடன் அவர்களது பணிபெண்ணும் உடன் வந்தார். ரஜினி குடும்பத்தினரை பார்த்ததும் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க சூழந்தனர். அப்போது கூடவே வந்த பணிப்பெண்ணை பார்த்து ரஜினி ஏதோ சொல்வது போல இருந்தது. அதாவது, தள்ளி நிற்குமாறு சொல்வது போன்று அவரது சைகை இருந்தது.
இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொது இடத்தில் ரஜினி இப்படி நடந்து கொண்டது சரியல்ல என்று சில நெட்டிசன்கள் அவரை விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும் நெட்டிசன்கள் சிலர் கருத்து கூறி வருகிறார்கள். குடும்ப போட்டோ எடுக்கும்போது மற்றவர்களை விலகி நிற்கச் சொன்னது எப்படி தவறாகும் என்பது அவர்கள் கேள்வி.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications