ஸ்விக்கி டெலிவரி பாய் டூ ஃபேஷன் மாடல்.. மும்பை இளைஞரின் சுவாரஸ்ய கதை

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்விக்கி டெலிவரி பாயாக வேலை செய்து வந்த மும்பை இளைஞர் ஒருவர் ஃபேஷன் மாடலாக மாறியது எப்படி என்பது தொடர்பான சுவாரஸ்ய வீடியோ தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. பல வேலைகளை செய்து வந்த இளைஞர் தனது விடாமுயற்சியின் மூலம் ஃபேஷன் மாடல் துறையில் கால் பதித்த வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் இந்த வீடியோ சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

நாள்தோறும் எத்தனையோ ஃபுட் டெலிவரி செய்யும் இளைஞர்களைக் கடந்து சென்றிருப்போம். கடும் வெயிலானாலும், மழையானாலும் தங்களது உணவைக் கொண்டுபோய் சரியான நேரத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக ஆளாப்பறவையாய் பறந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு வியப்பூட்டும் கதைகள் இருக்கத்தான் செய்கின்றன.

mumbai fashion model

அந்த வகையில், பிரபல ஃபுட் டெலிவரி பிளாட்பார்மான ஸ்விக்கியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெலிவரி பாயாக பணியாற்றி வந்த இளைஞர் தற்போது பல முன்னணி பிராண்டுகளுக்கு ஃபேஷன் மாடலாக மாறியிருக்கும் மும்பை இளைஞரின் வாழ்க்கை பயணம், வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்று துடிப்புடன் இருக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் சாஹில் சிங். இவர் தனது சுவாரஸ்யமான வாழ்க்கை கதையை இன்ஸ்டாவில் ஒரு வீடியோ போஸ்டாக பகிர்ந்துள்ளார். இந்த பதிவு சுமார் 4 மில்லியனுக்கும் பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவில், சாஹில் சிங் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஸ்விக்கியில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பர்கர் கிங் கடையில் செஃப் ஆகப் பணியாற்றியுள்ளார்.

இதுபோன்ற பல்வேறு பணிகளைச் செய்து வந்த பிறகு தன்னுடைய அதிர்ஷ்டம் எப்படி உள்ளது என்பதைப் பார்க்கலாம் என்று துணிந்து மாடலிங் துறையில் களமிறங்கியுள்ளார். ஆனால், இவரது அசாதரண நம்பிக்கை அவருக்கு கைகொடுத்தது. ஆம்.. மாடலிங் துறையில் வெற்றி கண்ட இவர் பல பிரபல புரோஜக்ட்களில் மாடலாகப் பணியாற்றி தவிர்க்க முடியாத மாடலாக மாறியுள்ளார். தனது முதல் மாடலிங் வேலையைப் பெறுவதற்கு 8 மாதங்களுக்கு முன்புவரை மேங்கோ மார்ட்டில் எக்ஸிக்யூட்டிவாக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெலிவரி பாய் டூ சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் டூ மாடல் என்ற கேப்ஷனுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாஹில் வீடியோ பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள இந்த வீடியோ பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். உங்களது விடாமுயற்சி எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. நீங்கள் கடினமாக உழைக்கத் தயாராக இருப்பது பாராட்டுக்குரியது போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

மாடலிங் துறையில் தடம் பதித்துள்ள சாஹிலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். சாஹில், தனது ஃபாலோயர்கஸ்களுக்கு குரூமிங் டிப்களையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

அதேபோல, மாடலிங் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் புதிய சீரிஸ் ஒன்றையும் தொடங்கியுள்ளார். மாடலிங் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விரும்புவோர் முதலில் தங்களுக்கான ஸ்டைலிஸ்ட்டுகள், டிசைனர்கள், ஃபோட்டோகிராஃபர்கள், ஸ்டுடியோ நபர்கள் கொண்ட நெட்வொர்க்கை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+