ப்ளீஸ்.. "ஒரு நாளாவது லீவ் எடுத்துக்கோங்க சார்.." பிரதமர் மோடிக்கு ஷாருக்கான் ஸ்வீட் "அட்வைஸ்"
மும்பை: "ஒரு நாளாவது விடுமுறை எடுத்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் அறிவுரை கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 72-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது; ரத்ததானம் முகாம்களை நடத்துவது; அன்னதானம் வழங்குவது என ஒவ்வொரு மாநிலத்திலும் மோடியின் பிறந்தநாளை பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

மக்களும் உற்சாக கொண்டாட்டம்
பாஜகவினரின் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, பல இடங்களில் பொதுமக்களே பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை அவரவர் விருப்பப்படி கொண்டாடி வருகின்றனர். ஒரு சிலர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடுகிறார்கள். சிலரோ தங்கள் பகுதியில் தண்ணீர் பந்தல், மோர் பந்தல், இலவச உணவு ஆகியவற்றை வழங்கி மோடியின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். மேலும் பல பகுதிகளில் மோடியின் பிறந்தநாளை ஒட்டி கலை நிகழ்ச்சிகளும், அவரது சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்களும் நடைபெறுகின்றன.

வாழ்த்து மழை
அதேபோல, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் தலைவர்கள், ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனால் இன்று காலை முதலாக வாழ்த்து மழையில் பிரதமர் மோடி நனைந்து வருகிறார்.

பிறந்தநாளிலும் ஓய்வில்லை..
இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உஸ்பெகிஸ்தான் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து இன்று அதிகாலை தான் டெல்லி திரும்பினார். பிறந்தநாள் என்பதால் பிரதமர் இன்று ஓய்வில் இருப்பார் என்றே அவரது பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உட்பட பலரும் நினைத்தனர். ஆனால், நமீபியாவில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை உயிரியல் பூங்காவில் விடுவிக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

ஷாருக்கான் வாழ்த்து
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "நம் நாட்டுக்காகவும், நாட்டு மக்கள் நலனுக்காகவும் உங்களின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது. உங்கள் இலக்குகளையும், லட்சியத்தையும் அடைய உங்களுக்கு வலிமையும், ஆரோக்கியமும் எப்போதும் இருக்க வேண்டும். இன்று ஒருநாளாவது விடுமுறை எடுத்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள் சார். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என ஷாருக்கான் கூறியுள்ளார்.
ஷாருக்கானின் இந்த பிறந்தநாள் வாழ்த்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications