தாவூத் எங்கே இருக்கிறார்ங்கிறது ஒருபக்கம்.. இப்ப யார்கூட லிங்க்குல இருக்கார்னு தெரியுமா.. அடேங்கப்பா

37 வயசு நடிகையுடன் தாவூத்துக்கு நெருக்கம் என்று தகவல்கள் கூறுகின்றன

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில்தான் நடிகைகளுடன் குஜாலாக இருந்தார் என்று பார்த்தால், தலைமறைவாகி பதுங்கி உள்ள நிலையிலும், தாவூத்துக்கு இந்த கசமுசா பழக்கம் போகவில்லை போலும்.. 37 வயசு நடிகையுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கிறாராம்.

1993-ம் ஆண்டில் மும்பையில் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருந்தே ஃபேமஸ் ஆனவர் தாவூத் இப்ராஹிம்.. நிழல் உலக தாதா என்பார்கள்.. இந்தியா முழுக்க இந்த தாதா ஃபேமஸ்!

 Terrorist Dawood Ibrahims girl friend Actress Mehwish Hayat

அந்த குண்டுவெடிப்பு மட்டுமல்லாமல், இன்னும் நிறைய கிரிமினல் குற்றங்களில் இவருக்கு தொடர்பு இருக்கிறது.. உலகில் உள்ள முக்கியமான நாடுகள் இவரை தேடி கொண்டிருக்கிறது.. ஆனால் என்ன காரணம் என்றே தெரியவில்லை.. இவர் இன்னும் கிடைக்கவில்லையாம்!!

ஆனால், இவரை பற்றின செய்திகள் மட்டும் வந்து கொண்டே இருக்கும்.. மும்பையை இவர் கலக்கியபோது, பாலிவுட்டில் நெருங்கிய தொடர்புடையவர் என்று செய்திகள் வெளியாகின.. அதாவது இவர் நினைத்திருந்தால், பாலிவுட்டில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று பகிரங்கமாகவே சொல்லப்பட்டது.. மேலும், ஒருசில நடிகைகளிடமும் தொடர்பில் இருந்தார் என்றார்கள்.

இவரை வலை வீசி போலீஸ் தேடி வரும்நிலையில், சில காரணங்களால் பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறார் என்று பல்வேறு தரப்பினர் சொல்லுகிறார்கள்... கராச்சியில் ஒரு ஆடம்பரமான பகுதியில் ஒரு பெரிய பங்களாவில் வசித்து வருகிறாராம்.. ஆனால், பாகிஸ்தான் அரசு இதை மறுத்து வருகிறது.. எங்க நாட்டில் அவர் இல்லவே இல்லை என்று கூறி வரும்நிலையில், அதே பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு நடிகையிடம் தாவூத் தொடர்பில் இருக்கிறாராம்.. அந்த நடிகை பெயர் மெஷ்விஷ் ஹயாத்.. 37 வயசாகிறது.. இப்படி ஒரு செய்தியை சொன்னதே பாகிஸ்தான் மீடியாக்கள்தான்.

இதற்கும் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. நடிகை மெஷ்விஷ் ஹயாத் என்பவர் அந்த நாட்டில் அவ்வளவாக புகழ்பெற்றவர் கிடையாது.. அவருக்கு மிக முக்கிய விருதான 'தம்கா-இ-இம்தியாஸ்' என்ற விருதை பாகிஸ்தான் திரைத்துறை வழங்கியிருக்கிறதாம்.. அதுமட்டுமல்ல, அங்குள்ள மீடியாக்கள் இவரை மையப்படுத்தியே செயல்பட்டு வருகிறதாம்.

அதனால் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக உருவெடுத்து வருகிறார் இந்த நடிகை.. இதனால் பாகிஸ்தான் திரையுலகம் ஷாக்கில் இருக்கிறதாம்.. இதுபோன்ற தகவல்களை எல்லாம் வைத்து கூட்டி, கழித்து பார்த்தால், தாவூத்தின் பார்வை, அந்த நடிகையின் மீது விழுந்துவிட்டது என்றே தெரிவதாக பாகிஸ்தான் ஊடகம் தெரிவிக்கிறது.

இந்த நடிகை ஃபேமஸ் ஆவது ஒரு பக்கம் இருக்கட்டும்.. ஆனால் தாவூது தலைமறைவாக இருந்தாலும் ஜம்மென்று ஜாலியாக இருக்கிறாரே.. எப்படி?!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+