Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் டெஸ்லா ஷோரூம் அமையவுள்ள இடம் இதுதான்! மாத வாடகை மட்டும் ரூ.35 லட்சமாம்! அம்மாடி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: அமெரிக்காவின் டெஸ்லா கார் நிறுவனம் விரைவில் இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கவுள்ளது. இதற்காக டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே ஆட்களை எடுக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக ஷோரூமுக்கான இடத்தையும் டெஸ்லா நிறுவனம் தேர்வு செய்துவிட்டது. மும்பை மற்றும் டெல்லியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்களும் வெளியாகியுள்ளது.

உலகின் மிக பெரிய எலக்டிரிக் கார் நிறுவனமாக டெஸ்லா இருக்கிறது. மின்சார கார்களை ஓட்டினால் போர் அடிக்கும், பவர் இருக்காது என்றே முதலில் பலரும் நினைத்தனர். ஆனால், அதை மாற்றிக் காட்டியது டெஸ்லா.

tesla Elon Musk automobile

டெஸ்லா

கிட்டதட்ட பெட்ரோல்/ டீசல் காருக்கு இணையாக பவர்புல் கார்களாக டெஸ்லா இருந்தது. இதன் காரணமாகவே அமெரிக்காவிலும் கூட டெஸ்லாவால் வெற்றிகரமாக இருக்க முடிந்தது. அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பாவிலும் கூட டெஸ்லாவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து டெஸ்லா நிறுவனம் இந்திய கார் சந்தையிலும் நுழைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தனை காலம் வெளிநாட்டு கார்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யும் போது அதிக வரி கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால், இந்த வரியை மத்திய அரசு குறைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து டெஸ்லா இந்தியச் சந்தையில் நுழையும் எனத் தெரிகிறது. இந்திய மார்க்கெட்டில் நுழையத் தேவையான பணிகளை டெஸ்லா நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

ரூ.35 லட்சம் வாடகை

முதற்கட்டமாக டெஸ்லா நிறுவனம் தனது ஷோரூமை மும்பையில் தொடங்க திட்டமிட்டுள்ளது. மும்பையின் மேக்கர் மேக்சிட்டியில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஷோரூமை ஆரம்பிக்க டெஸ்லா முடிவு செய்துள்ளது. இந்த இடத்திற்கு மாதம் சுமார் ₹35 லட்சத்தை டெஸ்லா வாடகையாக தரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 3000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள கார் ஷோரூம், மேக்கர் மேக்சிட்டியில் உள்ள டவரின் தரை தளத்தில் அமைந்துள்ளது. கார் பார்க்கிங் தொடங்கி தேவையான அனைத்து வசதிகளும் இதில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

நமது நாட்டில் ஆட்டோமொபைல் ஷோரூம் ஒன்றுக்கு இந்தளவுக்கு வாடகை தருவது இதுவே முதல்முறையாகும். நமது நாட்டில் இதுவரை போடப்பட்ட அதிகபட்ச ஷோரூம் வாடகை ஒப்பந்தமாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. மும்பையைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒரு பிரத்தியேக ஷோரூம் அமைக்க டெஸ்லா முடிவு செய்துள்ளது.

tesla Elon Musk automobile

டெல்லி ஷோரூம்

டெல்லியில் இதற்காக சுமார் 4000 சதுர அடி என்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு மாத வாடகை சுமார் ₹25 லட்சம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே புரூக்ஃபீல்ட் நிறுவனத்திற்குச் சொந்தமாக ஏரோசிட்டி அமைந்துள்ள நிலையில், அங்கு தான் இந்த ஷோரூம் அமையும் எனத் தெரிகிறது.

இந்திய நிறுவனங்களுக்குப் பாதிப்பு வருமா

மின்சார கார் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் டெஸ்லாவின் வருகை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் டெஸ்லாவின் கார்கள் விலை எல்லாம் ரூ.20 லட்சத்திற்கு மேல் தான் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. செல்வந்தர்களால் மட்டுமே டெஸ்லா கார்களை வாங்க முடியும். இதனால் மாருதி, டாடா, மஹேந்திரா உள்ளிட்ட இந்திய கார் நிறுவனங்களுக்கு இதனால் பாதிப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+