ராகுலிடம் பேசியும் நோ யூஸ்.. கடைசி நேரத்தில் பெரிய ட்விஸ்ட்.. மகாராஷ்டிராவில் எல்லாம் மாறிடுச்சு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே அங்கு ஏகப்பட்ட அரசியல் மாற்றங்கள் நடந்து வருகிறது. தாக்கரே சகோதரர்கள் இணைந்துள்ள நிலையில், காங்கிரஸையும் கூட்டணிக்கு அழைத்து வர முயற்சிகள் நடத்தப்பட்டன. ராகுல் காந்தியிடமும் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த சூழலில் கடைசி நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் அங்கு நடந்துள்ளது.

மகாராஷ்டிராவில் வெறும் 48 மணி நேரத்தில் ஏகப்பட்ட அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. மகாராஷ்டிரத் தலைநகரான மும்பைக்கு அடுத்தாண்டு தொடக்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களின் பட்ஜெட்டை விடவும் மும்பைக்கான பட்ஜெட் பெரியது. இதனால் மும்பை தேர்தல் தேசியளவில் கவனம் பெறுகிறது.

Thackeray brothers Reunite Officially Congress Rules Out Continuing MVA Alliance in Mumbai polls

மும்பை தேர்தல்

இந்த தேர்தலை முன்னிட்டு அங்கு அடுத்தடுத்து மாற்றங்கள் நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் இத்தனை காலம் தாக்கரே சிவசேனா மற்றும் காங்கிரஸ் இணைந்து பயணித்து வந்தன. இந்தச் சூழலில் தாக்கரே சிவசேனா தரப்பும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டணி அமைத்து மும்பை மாநகராட்சித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன. இதுவே அங்குக் குழப்பத்திற்குக் காரணம்.

ராகுல் காந்தி

மராத்தி அடையாள அரசியலைச் செய்யும் ராஜ் தாக்கரே தரப்பிற்குச் சிறுபான்மையினர் மற்றும் பிற மாநிலத்தவர் வாக்குகள் வராது. இதனால் காங்கிரஸ் கட்சி ராஜ் தாக்கரே உடன் இணைய முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இந்தச் சூழலில் தான் நேற்று முன்தினம் ராகுல் காந்தியிடம் இது தொடர்பா தாக்கரே சிவசேனாவின் முக்கிய தலைவரான சஞ்சய் ராவத் நேரடியாகப் பேசினார். அதைத் தொடர்ந்து கூட்டணி சீராகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், இப்போது அங்கு நேர்மாறாகவே நடக்கிறது. அதாவது உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து அங்குத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். இதற்கான அறிவிப்பு இன்று பிற்பகலில் வெளியாகும் எனத் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இந்தக் கூட்டணியில் இடம்பெறாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "காங்கிரஸுடன் இனி கூட்டணி பேச்சுவார்த்தை இருக்காது. அதேநேரம் பகைத்துக் கொள்ளவும் மாட்டோம். தேர்தலைத் தனித்து எதிர்கொள்வோம். தேர்தலுக்குப் பின் தேவைப்பட்டால் ஆதரவைப் பெறுவோம். ஆனால், இரு சகோதரர்களும் மாநகராட்சியில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவது உறுதி" என்றார்.

திட்டவட்டம்

ராஜ் தாக்கரே இருக்கும் கூட்டணியில் தங்களால் இடம்பெற முடியாது என்பதைக் காங்கிரஸும் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த், "மகா விகாஸ் அகாடியில் ராஜ் தாக்கரேவுக்கு இடம் இல்லா.. அவரது சித்தாந்தம் வேறு.. எங்கள் சித்தாந்தம் வேறு.. இருவரும் ஒன்றாகப் பயணிக்க முடியாது. இதால் தனித்துப் போட்டியிடுகிறோம். மொழி, மதம் சார்ந்த சர்ச்சைகளை உருவாக்குபவர்களிடமிருந்து நாங்கள் எப்போதும் விலகி இருப்போம்" என்றார்.

சரத் பவார்

அங்கு எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள சரத் பவார் என்சிபி கட்சி இப்போது கூட்டணி குறித்து ஆலோசித்து வருகிறது. தாக்கரே சகோதரர்களுடன் இணைந்து கூட்டணியை அமைக்கலாமா அல்லது காங்கிரஸுடன் தேர்தலை எதிர்கொள்ளலாமா என்பது குறித்து அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். எந்தக் கூட்டணியில் வெற்றி வாய்ப்பு அதிகம்.. எந்த கூட்டணியில் அதிக சீட் கிடைக்கும் என்பதைப் பொறுத்து சரத் பவார் தரப்பு கூட்டணி முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது. இதனால் இந்த முறை மும்பை உள்ளாட்சித் தேர்தல் சுவாரசியமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+