விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்.. ஓவர் நைட்டில் லட்சாதிபதி தான்! ஆனால் கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்
மும்பை: மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவரது வங்கிக் கணக்கில், தவறுதலாக ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்பட்ட நிலையில், அதை வைத்துக் கொண்டு அவர் செய்த சம்பவம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அந்த விவசாயி செய்த சம்பவம் தான் இணையத்தில் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது. அந்த விவசாயி-இன் செயல்

மகாராஷ்டிர விவசாயி
கடந்த ஆகஸ்ட் 2021இல், ஞானேஷ்வர் ஓட்டே என்ற விவசாயி-இன் ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அந்த விவசாயி, பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக உணர்ந்துள்ளார். இத்துடன் நில்லாமல் பிரதமர் மோடிக்கு அந்த விவசாயி நன்றி தெரிவித்து கடிதமும் கூட எழுதியுள்ளார்.

என்ன நடந்தது
மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைதான் பகுதியைச் சேர்ந்த ஞானேஷ்வர் ஓட்டே விவசாயி-இன் வங்கிக் கணக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் 15,34,624 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. முதலில் எப்படி தனக்கு இந்தளவு பணம் வந்தது என்பது அந்த விவசாயிக்கே புரியவில்லை. இருப்பினும், பிரதமர் மோடி தனது 2014 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் என எண்ணியுள்ளார்.

பெரிய ஷாக்
இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த விவசாயி, பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும், நீண்ட காலமாகச் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என எண்ணி வந்த விவசாயி ஞானேஷ்வர் ஓட், இதற்காகத் தனது வங்கிக் கணக்கில் இருந்து 9 லட்ச ரூபாயை எடுத்துள்ளார். இதையடுத்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்த அவருக்கு 6 மாதங்களுக்கு பின்னர் பெரிய ஷாக் காத்திருந்தது.

கிராமத்தின் பணம்
அதாவது சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, அவரது கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டதாகவும் அந்தத் தொகையை முழுவதுமாக திருப்பித் தருமாறு வங்கி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த பணம் பிம்பல்வாடி கிராம பஞ்சாயத்துக்கு வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டது என்றும் இருப்பினும் அது தவறுதலாக விவசாயி ஞானேஷ்வர் ஓட் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு தான், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் பணம் விவசாயி ஞானேஷ்வர் ஓட்டே கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதைக் கிராம பஞ்சாயத்து உணர்ந்தது.

புலம்பும் விவசாயி
அதன் பின்னரே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாயி ஞானேஷ்வர் ஓட்டே கூறுகையில், "பிரதமர் மோடியால் இந்த தொகை அனுப்பப்பட்டது என்று நினைத்துத்தான் பணத்தைச் செலவிட்டேன். மீதமுள்ள ரூ.6 லட்சத்தை வங்கியில் செலுத்திய நிலையில், வீடு கட்ட செலவழித்த ரூ.9 லட்சத்தை இன்னும் செலுத்தவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications