ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி, தாராவியில் வேகமாக பரவும் கொரோனா.. டாக்டருக்கும் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை தாராவியில் பணியாற்றும் டாக்டருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் பதிவான 3வது கொரோனா நோயாளி இவராகும். ஏற்கனவே ஒரு நோயாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Recommended Video

    உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா

    தாராவியின் பிரதான சாலையில் கிளினிக் வைத்திருந்த ஒரு மருத்துவர் இவ்வாறு பாதிக்கப்பட்ட 3வது நபராகும்.

    Third coronavirus case found in Mumbais Dharavi

    "அவர் வசிக்கும் கட்டிடம் தனிமைப்படுத்தப்படும் மற்றும் அதிக ஆபத்துள்ள அவரின் அனைத்து தொடர்புகளும் கண்டறியப்படும்" என்று மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

    பாதிக்கப்பட்ட மருத்துவரிடம் எந்த வெளிநாடு அல்லது உள்நாட்டு பயணமும் மேற்கொண்டதில்லை. எனவே மேலதிக விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    Third coronavirus case found in Mumbais Dharavi

    ஏப்ரல் 1 ஆம் தேதி, தாராவியில் உள்ள குடிசைப்பகுதி மறுவாழ்வு ஆணைய கட்டிடத்தில் வசிக்கும் 56 வயதான ஆடை கடை உரிமையாளர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது. இவர்தான் தாராவியில் பாதிக்கப்பட்ட முதல் நபராகும். ஆனால், அன்றைய தினம் மாலையில் அந்த நபர் பலியானார்.

    வியாழக்கிழமை காலை, வோர்லியை சேர்ந்த மாநகராட்சி துப்புரவாளருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த துப்புரவு தொழிலாளி, தாராவியில் பணியமர்த்தப்பட்டிருந்தவர். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாராவியை சேர்ந்த 3வது நபர் இவராகும்.

    Third coronavirus case found in Mumbais Dharavi

    தாராவி மிகப்பெரிய குடிசை பகுதி என்பதால், இங்கு நோய் பரவினால் கட்டுப்படுத்துவது சிரமம் என்பதால், பரபரப்பு நிலவுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+