புலியிடம் சிக்கிய நபர்.. சிறு காயமும் இல்லாமல் சாமர்த்தியமாக உயிர் தப்பும் வீடியோ காட்சி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    புலியிடம் சிக்கிய நபர் தப்பிக்கும் வீடியோ !

    மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பாந்தரா மாவட்டத்தில் புலியிடம் சிக்கிக்கொண்டவர் சாமர்த்தியமாக உயிர் தப்பிய வீடியோ காட்சி ஒன்று வேகமாக பரவி வருகிறது..

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த பாந்தரா மாவட்டத்தில் விவசாய நிலப்பகுதிக்குள் புலி ஒன்று சனிக்கிழமை அன்று புகுந்துள்ளது.

    tiger vs man: how does a narrow escape looks like in case of encounter with a tiger

    அந்த நிலத்தில் இருந்தவரை பார்த்த புலி அவரை அடித்துக்கொள்ள சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அவரை சுற்றி வளைத்தது. இதனால் பதற்றம் அடைந்த அந்த நபர் என்ன செய்வது என்று புத்திசாலித்தனமாக யோசித்தார்.

    அவர் உடனடியாக கீழே படுத்து தரையோடு தரையாக மூச்சு பேச்சு இல்லாதவரை போல் அசையாமல் இருந்தார். அசைவே இல்லாமல் இருந்ததால் அந்த புலி அங்கேயே அமர்ந்து காத்துக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட பொதுமக்கள் ஒன்றாகக் கூடி கூச்சலிட ஆரம்பித்தனர். சிலர் அருகே இருந்த மரத்திலிருந்து கத்த ஆரம்பித்தனர்.

    பின்னர் பலரும் தன்னை நோக்கி வருவதை கண்ட புலி, பின் சாலையைக் கடந்து தெறித்து ஓடியது. அதன்பின் சிக்கிக் கொண்ட அந்த நபர் எழுந்து மிக இயல்பாக நடந்து சென்றார்.. அவருக்கு ஆயுள் கெட்டி என்று அங்கிருந்தவர்கள் பேசியபடி இந்தக் காட்சியை செல்போனில் வீடியோவாக பதிந்திருக்கிறார்கள். இதை பர்வீன் கஸ்வான் என ஐஎப்எஸ் அதிகாரி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+