பிக்பாஸ் வீட்டில் ஒரு வெளிநாட்டு பிரபலம்.. அதுவும் டான்ஸ் ஆடியபடியே என்ட்ரி! யார் தெரியுமா?
மும்பை: டிக்டாக் பிரபலம் கிலிபால் ஹிந்தி பிக்பாஸ் வீட்டில் கலக்கல் நடனம் ஆடியபடியே உள்ளே நுழைந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் இடம் பிடித்துள்ளார்கள் என்பது குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அது போல் அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்திற்காக இப்போதே போட்டியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு சென்றுவிட்டார்கள் என கூறப்படுகிறது. ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவேற்கப்படுவர்.

கொரோனா
கொரோனா காலம் முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் கமல்ஹாசனும் ஹிந்தியில் சல்மான் கானும் தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். முதலில் ஹிந்தியில்தான் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

15 சீசன்கள்
அதனால் தற்போது இந்த நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்து 16 ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு வெளிநாட்டு பிரபலம் போட்டியாளராக வந்துள்ளதாக வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது டிக்டாக் பிரபலம் டான்சானியா நாட்டை சேர்ந்த கிலிபால் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் , கோலிவுட் பாடல்கள்
பாலிவுட், கோலிவுட் பாடல்களுக்கு டிக்டாக் செய்திருந்தார். அது போல் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் வந்த சில பாடல்களுக்கும் காட்சிகளுக்கும் கிலி பாலும் அவரது தங்கை நீமா பாலும் நிறைய ரீல்ஸ் வீடியோவை செய்துள்ளார்கள். அத்துடன் வெளிநாட்டை சேர்ந்திருந்தாலும் இருவரும் பாடலுக்கு தக்கபடி வாய் அசைத்து வீடியோ வெளியிடுவது இவர்களுடைய ஸ்பெஷாலிட்டி.

கால்நடைகள்
இருவரும் கால்நடைகளை மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார்கள். கிடைக்கும் நேரத்தில் வீடியோக்களை செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு குடியரசுத் தினத்தன்று இந்தியாவின் தேசிய கீதத்தை பாடி இருந்தனர். இவர்கள் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டவர்கள். இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாரோ 5 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டதாக ஒரு போஸ்ட் போட்டிருந்தார். இந்த நிலையில் கிலிபால் பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக சென்றுள்ளாரா இல்லை சிறப்பு விருந்தினராக சென்றுள்ளாரா என்பது தெரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications