பயிற்சியின் போதே பந்தா? ஐஏஎஸ் அதிகாரி பூஜாவுக்கு புதிய சிக்கல்.. மத்திய அரசு அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

மும்பை: சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கருக்கு 22 கோடி ரூபாய் சொத்து இருக்கும் நிலையில், கிரிமிலேயர் அல்லாத பிரிவில் இவர் எப்படி வருவார் என்று பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவி கேள்வி எழுப்பி உள்ளது.

யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்ற பூஜா கேத்கர், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்ட உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை அவர் பயன்படுத்துவதாக சர்ச்சைகள் வெடித்தது. பூஜா தனது சொந்த காரில் மகாராஷ்டிர அரசு என்ற பலகையும் சிவப்பு-நீல சைரன் விளக்கும் பயன்படுத்தி வந்தார்.

Maharashtra IAS

கூடுதல் கலெக்டர் அஜய் மோரே இல்லாதபோது அவரதுமுன் அறையை பூஜா ஆக்கிரமித்ததுடன் அவரது அனுமதியின்றி அங்கிருந்த பொருட்களை அகற்றி இருக்கிறார். வருவாய் உதவியாளரிடம் தனது பெயரில் லெட்டர் ஹெட், பெயர்ப் பலகை மற்றும் பிற வசதிகளை வழங்குமாறு கேட்டிருக்கிறார். இந்த சூழலில் பூஜாவின் தந்தை ஓய்வுபெற்ற அதிகாரி என்பதால் தனது மகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அதிகாரிகளுக்கு நெருக்குதல் கொடுத்தாராம். இது ஒருபுறம் எனில் தன்னுடைய தனி வாகனமான ஆடி செடானில் சிவப்பு-நீல நிற சைரைன் பொருத்தி சென்றுள்ளார்.இது பெரும் சர்ச்சையானது.

இதுபற்றி மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளருக்கு புனே மாவட்ட ஆட்சியர் சுகாஸ் திவேசா கடிதம் எழுதினார். இதையடுத்து பூஜா புனேயிலிருந்து வாஷிமுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் பணியில் சேருவதற்கு முன்பே பல வசதிகளை கோரியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பான வாட்ஸ்- அப் உரையாடல் கொண்ட 3 ஸ்கிரீன்ஷாட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல், அவர் கிரிமிலேயர் என்றும், எப்படி நான் கிரிமிலேயர் என்று கூறி ஐஏஎஸ் அதிகாரியாகலாம் என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.

என்டிடிவி வெளியிட்ட செய்திகளின் படி, இதனை இப்போது பார்ப்போம். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், தனது யுபிஎஸ்சி வேட்புமனுவில் நான் கிரிமிலேயேர் என்று கூறிய நிலையில், அவருக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது,

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் 2023ம் ஆண்டின் சொத்துப்பட்டியல் 2024 ஜனவரி 1ம் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இது பட்டியல் என்டிடிவிக்கு பிரத்தியேகமாக கிடைத்துள்ளது. இதன்படி பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கருக்கு மகாராஷ்டிரா முழுவதும் ஐந்து நிலங்கள் மற்றும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கின்றன. இந்த சொத்துக்களின் மதிப்பு 22 கோடி ரூபாய் ஆகும்.

புனே மாவட்டத்தின் மஹாலுங்கேயில் கிட்டத்தட்ட ரூ. 16 கோடி மதிப்புள்ள இரண்டு நிலங்களும், புனே மாவட்டத்தின் தாதாவாலியில் ரூ. 4 கோடி மதிப்பில் நிலமும், அகமத்நகரின் பச்சுண்டே மற்றும் நந்தூர் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு நிலங்களின் மதிப்பு முறையே ரூ. 25 லட்சம் மற்றும் ரூ. 1 கோடி மதிப்பு ஆகும். இந்த இரண்டு நிலங்கள் உரிமையாளர் என்று பூஜா கேத்கர் பெயர் இருக்கிறது. மகாராஷ்ராவின் பசுண்டே மற்றும் நந்தூரில் உள்ள வீட்டு மனைகள் அவரது தாயாரிடமிருந்து கிடைத்துள்ளது. மொத்தத்தில் பயிற்சி ஐஏஏஸ் அதிகாரி பூஜா கேத்கரருக்கு அவருக்கு 22 ஏக்கர் நிலம் உள்ளது.

இதுதவிர பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கருக்கு அகமதுநகர் மற்றும் புனே ஆகிய இடங்களில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அகமதுநகரின் சவேதியில் உள்ள 984 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு ரூபாய் 45 லட்சம் ஆகும். புனேவின் கோந்த்வாவில் உள்ள 724 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். அனைத்து சொத்துக்களும் 2014 மற்றும் 2019 க்கு இடையில் வாங்கப்பட்டுள்ளன. பயிற்சி ஐஏஏஸ் அதிகாரி பூஜா கேத்கரின் ஆண்டு வருமானம் 42 லட்சம் ரூபாய் ஆகும். புனேவைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் விஜய் கும்பரின் கூற்றுப்படி, பூஜா கேத்கரின் தந்தைக்கு ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கிறது.

ஆனால் பூஜா கேத்கர் தனது யுபிஎஸ்சி தேர்வுக்கான மனுவில் ஓபிசி அல்லாத நான் கிரீமி லேயர் என்று கூறி கலந்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில், ஓபிசி அல்லாத கிரீமிலேயர் பிரிவுக்கு தகுதி பெற, விண்ணப்பதாரரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் அல்லது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் 40 லட்சம் வருமானம் உள்ள பூஜா கேத்கர் நான் கிரிமிலேயராக காட்டி ஐஏஎஸ் பொறுப்பிற்கு வந்தள்ளார். இந்திய அளவில் 841 வது இடத்தைப் பெற்றுள்ளார். பூஜா கேத்கர் யுபிஎஸ்சி தேர்வின்போது கற்றல் குறைபாடு உள்ளிட்டபல்வேறு குறைபாடுகள் இருப்பதாகக் கூறி சிறப்புச் சலுகைகளை பெற்றுள்ளார். எனினும் இதுகுறித்த மருத்துவ சரிபார்ப்புக்கும் அவர் செல்லவில்லை.

இந்த சர்ச்சை வெளியான நிலையில், புதிய ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கருக்கு பெருகிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் யுபிஎஸ்சி தேர்வில் சமர்ப்பித்த தேர்வர்களுக்கான "வேட்பு மனுக்கள் மற்றும் பிற விவரங்களை" சரிபார்க்க மத்திய அரசு உறுப்பினர் குழுவை அமைத்திருக்கிறது. இந்தக் குழு இரண்டு வாரங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன்பிறகே அவர் ஐஏஎஸ் அதிகாரியாக தொடர்வாரா இல்லையா என்பது தெரியும். இது பற்றி கருத்து கேட்ட போது, "அரசு விதிகளின் படி இந்த விஷயத்தில் என்னால் எதுவும் பேச முடியாது. எனவே மன்னிக்கவும், என்னால் பேச முடியாது," என்று பூஜா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+