ஒருவரையே மணந்த இரட்டை சகோதரிகள்.. மச்சக்கார டிரைவர்.. டிரென்டாகும் திருமணம்
மும்பை: மும்பையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒருவரையே மணந்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
மும்பை சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிங்கி மற்றும் ரிக்கி. இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரும் மும்பையில் பொறியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இருவரும் பிறந்ததில் இருந்து ஒரு முறை கூட பிரிந்ததே இல்லை.
ஒரே வீட்டில் வசித்து வரும் இருவரும் பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்புகளை ஒன்றாக முடித்தார்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். இந்த நிலையில் அண்மையில் இவர்களது தந்தை இறந்துவிட்டார்.

இரு மகள்கள்
இதையடுத்து இரு மகள்களும் தனது தாயுடன் வசித்து வந்தார்கள். ஒரு முறை இவர்களது தாய்க்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தாயை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கால் டாக்சியை அழைத்தார்கள். இருவரும் தாயை காரில் அமர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

உதவிய டிரைவர்
மூவருமே பெண்கள் என்பதால் தாயை உட்கார வைப்பது பிடித்து தூக்குவது, உள்ளிட்ட விஷயங்களில் ரிங்கி மற்றும் பிங்கிக்கு டாக்சி டிரைவரான அதுல் உதவியுள்ளார். அவர் மல்ஷிராஸ் எனும் பகுதியை சேர்ந்தவர். அதுலின் நல்ல மனதும் உதவும் குணமும் பிங்கி ரிங்கிக்கு மிகவும் பிடித்துவிட்டது.

ஆண் இல்லாத குறை
மேலும் இருவரும் அப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தனர். நம்வீட்டில் ஆண் இல்லாத குறையை அதுல் போக்குகிறார். நம் தாய்க்கு உதவியாக இருக்கிறார். மேலும் நாம் இருவரும் வேறு வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டால் பிரிவு என்பது நிச்சயம் ஏற்படும். தாயின் கருவறையிலிருந்து ஒன்றாக பயணிக்கும் நாம் திருமணத்தில் பிரியக் கூடாது என முடிவெடுத்தனர்.

காதல் மலர்ந்தது
இதையடுத்து இருவரும் தங்களது காதலை போய் அதுலிடம் கூறினர். இதனால் அதுல் அதிர்ச்சி அடைந்தார். தங்களால் பிரிவை தாங்க முடியாது என்பதை அதுலுக்கு புரிய வைத்தனர். பிறகு அவரும் சம்மதம் தெரிவித்தார். ஆயினும் பெரியவர்கள் இதற்கு சம்மதித்தால் மட்டுமே இருவரை திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் சொல்லிவிட்டார்.

சிக்கல்கள்
இதையடுத்து சகோதரிகள் இருவரும் தனது தாயிடம் விஷயத்தை கூறினர். ஒருவரை இருவர் பங்கு போட்டுக் கொள்வதற்கு முதலில் ஆட்சேபம் தெரிவித்த அவர், அதில் உள்ள சிக்கல்களையும் மகள்களுக்கு விளக்கினார். எல்லாவற்றிற்கு தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் இருவரும் கூறியதால் இரட்டை சகோதரிகளின் தாயும் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்.

டிரென்ட்டான திருமணம்
அது போல் அதுலும் தனது வீட்டில் ரிங்கி - பிங்கி குறித்தும் அவர்களின் நிலைமை குறித்தும் விளக்கியுள்ளார். அவர்களும் பச்சைக் கொடி காண்பித்துவிடவே இவர்களுக்கு திருமணம் நடந்தது. அதுலுக்கு மாலை போடும் போது இருவரும் ஒரே மாலையை எடுத்துக் கொண்டனர். அப்போது அதுலை அவருடைய உறவினர்கள் தூக்கி பிடிக்க ரிங்கியும் பிங்கியும் எம்பி பார்த்து மாலை போட முடியாததால் அவர்களில் ஒருவரை உறவினர் தூக்கிவிட ஒருவழியாக மாலை போட்டனர். இப்படியாக நடந்த இந்த திருமணம் சமூகவலைதளங்களில் பரவி 90 கிட்ஸ் , 2 கே கிட்ஸ்களின் காதுகளில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications