"நீங்கள் என்ன படிச்சிருக்கீங்க".. ட்விட்டர்வாசி கேள்விக்கு இப்படி ஒரு பதிலை சொன்ன ஆனந்த் மகிந்திரா!
மும்பை: நீங்கள் என்ன சார் படிச்சிருக்கீங்கன்னு ட்விட்டர் பயனாளி ஒருவர் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவிடம் கேள்வி எழுப்ப அதற்கு அவர் சூப்பரான ஒரு பதிலை தெரிவித்துள்ளார்.
Recommended Video
மகிந்திரா தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா உத்வேகம் அளிக்கும் விஷயங்களை தனது ட்விட்டர் மூலம் பரப்பி வருவார். புதியதாக யார் எந்த விஷயத்தை செய்தாலும் அதை பாராட்டாமல் இருக்க மாட்டார்.
அது போல் சமூகவலைதளங்களில் எந்த கேள்வியை கேட்டாலும் அதற்கு பதிலளிப்பார். எளியவர்களுக்கு உதவிகளை செய்வார். அக்னிபாத் வீரர்களுக்கு தனது நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என்றார்.

மோட்டிவேஷன்
இவர் திங்கள்கிழமை தோறும் மோட்டிவேஷனல் ஸ்டோரி என்ற பெயரில் ஒரு பதிவை போடுவார். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் ஹிமாச்சலில் ஸ்டான் பகுதியில் சுற்றுலா சென்றேன். அப்போது சின்னஞ்சிறிய பெண்சிறுமி தனியாக மலை மீது உட்கார்ந்து படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்.

துளியும் கவனம் குறையவில்லை
புத்தகத்தை பார்த்தவாறு இருந்த அவரின் கவனம் துளி கூட சிதையவில்லை. இதை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்ததாக நேற்றைய தினம் புகைப்படத்துடன் அந்த பதிவை போட்டிருந்தார். இதற்கு ஆனந்த் மகிந்திரா பதிலளிக்கையில் அழகான புகைப்படம். அந்த சிறுமிதான் எனது மண்டே மோடிவேஷன் என குறிப்பிட்டிருந்தார்.

அனுபவம்
இந்த போஸ்ட் வைரலான நிலையில் ஒருவர் ஆனந்த் மகிந்திராவிடம் "சார் நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா" என கேட்டுள்ளார். இதற்கு ஆனந்த் மிக அற்புதமான பதிலை அளித்துள்ளார். "வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் என்னுடைய இந்த வயதிற்கு நான் கல்வியாக கருதுவது எனது அனுபவத்தைதான்" என்றார்.

அனுபவ பாடம்
தான் என்ன படித்திருக்கிறார் என்பதை அவர் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் வாழ்க்கைக்கு ஏற்ற அனுபவம் என்ற பாடம் குறித்து கூறியது இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றது. என்னதான் படித்திருந்தாலும் இன்று அனுபவம் இல்லாததால் வேலை கிடைக்காமல் எத்தனையோ இளைஞர்கள் அவதிப்படுகிறார்கள். படிப்பை காட்டிலும் அனுபவ அறிவே சிறந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications