மோடி நிகழ்ச்சி நடக்கும் இடத்தில்.. கையில் துப்பாக்கி.. பாக்கெட்டில் போலி ஐடி! இருவர் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் துப்பாக்கியுடன் இருவர் பிடிபட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் ஒருவர் பிரதமர் அலுவலக அதிகாரி என அடையாளப்படுத்தி கொண்டதுடன், போலி அடையாள அட்டையையும் வைத்திருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று மாலை அங்கு குளோபல் பின்டெக் ஃபேஸ்ட் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

PM Modi

துப்பாக்கி

இந்த நிலையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிவதை போலீசார் கண்டுள்ளனர். இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்திய மும்பை போலீசார், அவருடன் இருந்த அவரது பாதுகாவலரையும் பிடித்தனர். பிடிபட்ட நபரின் பாதுகாவலரிடம் துப்பாக்கி இருந்தது போலீசாரின் சோதனையில் தெரியவந்துள்ளது.

போலி ஐடி

இதையடுத்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களில் 24 வயதான ரோஹன் பரேக் என்பவர், தான் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி என்று போலீசாரிடம் அடையாளப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது ஐடி கார்டை வைத்து சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்தது போலி பிரதமர் அலுவலக அடையாள அட்டை என்பது தெரிய வந்துள்ளது.

பிரதமர் மோடி நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இந்த இருவரும் பிடிபட்டுள்ளனர். இதனால் சம்பவ இடத்தில் கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியுடன் ஒருவர் மற்றும் போலி அடையாள அட்டையுடன் மற்றொருவர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் வந்ததற்கான காரணம் என்ன, அவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்து மும்பை போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை போலீஸ் விசாரணை

இத தீவிரமான சம்பவம் என்பதால் விசாரணையை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கையில் எடுத்துள்ளனர். பிடிபட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதுடன், அவர்களது செல்போன்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் பிற உடைமைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் துப்பாக்கி மற்றும் போலி அடையாள அட்டைகளுடன் அவர்கள் எப்படி வந்தனர், அவர்களின் நோக்கம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+