சுழற்சி முறையில் முதல்வர் பதவிக்கு தயார் இல்லை.. 5 ஆண்டுகளும் தங்களுக்கே வேண்டும்.. சேனா பிடிவாதம்
மும்பை: சுழற்சி முறையிலான முதல்வர் பதவிக்கு தயார் இல்லை என உத்தவ் தாக்கரே கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன.
மகாராஷ்டிரத்தில் தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாத காலமாகியும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாததால் இன்னும் அங்கு புதிய அரசு அமையவில்லை. இதையடுத்து குறிப்பிட்ட காலஅவகாசம் கொடுக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இன்னும் 6 மாதங்களுக்கு மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி அமைய வேண்டும். இதற்காக காங்கிரஸ், என்சிபி ஆகிய கட்சிகளுடன் சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஒப்புக் கொள்ளவில்லை
இந்த நிலையில் சிவசேனா கேட்டது போல் முதல்வர் பதவியில் பாதியை தங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி கோருகிறது. இதற்கு சிவசேனா ஒப்புக் கொள்ளவில்லை.

என்சிபி
தங்களுக்கே முதல்வர் பதவி முழுவதும் வழங்க வேண்டும் என்றும் துணை முதல்வர் பதவி வேண்டுமானால் தர தயார் என சிவசேனா பிடிவாதம் பிடிக்கிறது. ஆனால் என்சிபியோ இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

சிவசேனா
மாறாக பாஜகவும் சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைத்தால் பெரும்பான்மையை காட்டிலும் அதிக இடங்கள் வருகின்றன. ஆனால் அந்த கூட்டணி முறிந்ததற்கு காரணம் முதல்வர் பதவியில் இரண்டரை ஆண்டுகள் வேண்டும் என சிவசேனா கேட்டு மோதல் போக்கை கடைபிடித்தார்களே.

சிவசேனாவுக்கு 5 ஆண்டுகள்
அது போல் நாங்களும் வெறும் இரண்டரை ஆண்டுகளை மட்டுமே விட்டுக் கொடுப்போம். நாங்களும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோமே என்கிறார்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் சிவசேனாவுக்கு 5 ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை கோரி வருகிறது.

தகவலறிந்த வட்டாரங்கள்
அது போல் அமைச்சரவையில் சிவசேனாவுக்கு 16 இடங்களும் , என்சிபிக்கு 15 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்களும் கிடைக்கலாம். அதே சமயம் முதல்வர் பதவிக் காலம் 5 ஆண்டுகளும் தங்களுக்கே வேண்டும் என்றும் , சுழற்சி முறையிலான முதல்வர் பதவிக்கு தயார் இல்லை என சிவசேனா பிடிவாதமாக உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications