ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் 26/11 தீவிரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது.. உத்தவ் தாக்கரே ஆவேசம்
Recommended Video
மும்பை: டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் நேற்று இரவு ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதில் மாணவர் சங்க தலைவரான ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது. மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழைகள்
இதுகுறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில் நாட்டில் மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையை உணருகின்றனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்து கொண்டு தாக்குதல் நடத்தியவர்கள் கோழைகள்.

பொறுத்துக் கொள்ள மாட்டோம்
அவர்கள் யார் என்பது குறித்து வெளிக் கொணர வேண்டும். மகாராஷ்டிராவில் மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். மாணவர்களை தாக்கும் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

தீவிரவாத தாக்குதல்
மாணவர்கள் மீதான தாக்குதல் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நடந்த தொடர் தீவிரவாத தாக்குதலை நினைவுப்படுத்துகிறது என்றார் உத்தவ் தாக்கரே.

ஒப்பீடு
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 164 பேர் பலியாகிவிட்டனர். 308 பேர் படுகாயமடைந்தனர். இந்த கண்மூடித்தனமான தாக்குதலை மாணவர்கள் மீதான தாக்குதலோடு உத்தவ் தாக்கரே ஒப்பிட்டு கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications