Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவசேனா: ஏக்நாத் ஷிண்டேவை நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை- மகாராஷ்டிரா சபாநாயகர் தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை சிவசேனா குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை உத்தவ் தாக்கரே நீக்க முடியாது; உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா கட்சி விதிகளின் படி அதிகாரம் இல்லை என மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2018 சட்டசபை தேர்தலின்போது மகராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. முதல்வராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார். இரண்டை ஆண்டு ஆட்சி நடந்தது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு சிவசனோவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஏம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.

Uddhav Thackeray had no power to remove Eknath Shinde: Maharashtra Speaker

ஆளும் கூட்டணி அரசுக்கு வழங்கிய ஆதரவை அவர்கள் வாபஸ் பெற்றனர். இதையடுத்து உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தன. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.

சிவசேனா இரண்டாக உடைந்த நிலையில் உண்மையான சிவசேனா யார்? தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆதரவு அடிப்படையில் உண்மையான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே அணி என உத்தரவிடப்பட்டது. சிவசேனாவின் வில் அம்பு சின்னம் ஏக்நாத் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டது. மாறாக உத்தவ் அணியை சிவசேனா (யூபிடி) எனவும், தீப்பந்தம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கியது.

முன்னதாக உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சட்டசபை சபாநாயகர் தாமதம் செய்வதாக உத்தவ் தாக்கரே தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் சட்டசபை சபாநாயகர் ராகுல் நார்வேகாருக்கு அதிரடியாக உத்தரவிட்டது.

அதாவது தகுதி நீக்கம் தொடர்பாக டிசம்பர் 31ம் தேதிக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியது. அதன்பிறகு 10 நாட்கள் காலஅவகாசம் வழங்கியது. அதாவது ஜனவரி 10ம் தேதிக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தீர்ப்பு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

சிவசேனா 2 அணிகளும் தேர்தல் ஆணையத்தில் இருவேறு தரப்பு வாதங்களை அளித்துள்ளன. சிவசேனாவின் தலைமை விவகாரத்தில் இரு தரப்பும் வெவ்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளன. 2018ல் சிவசேனாவின் திருத்தப்பட்ட கட்சி விதிகள் என்பது தேர்தல் ஆணைய பதிவேட்டில் இல்லை. தேர்தல் ஆணையத்தால் திருத்திய விதி ஏற்காததால் கட்சி தலைமை விஷயத்தில் இரு கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும்.

சிவசேனா கட்சி இரு அணிகளாக 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி உருவானது. 2022 ஜூன் 22ம் தேதி சிவசேனா 2 அணிகள் என்ற விபரம் சட்டசபை பதிவேட்டில் இடம் பெற்றது. சிவசேனாவை பொறுத்தமட்டில் தேசிய செயற்குழு தான் அதிகாரம் படைத்த அமைப்பாக உள்ளது. ஆனால் தேசிய செயற்குழு கூடியது தொடர்பான எந்த ஆதாரங்களையும், ஆவணங்களையும் உத்தவ் தாக்கரே அணி சமர்ப்பிக்கவில்லை.

மேலும் என்னுடைய பார்வையில் 2018ம் ஆண்டில் கட்சியின் தலைமை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் என்பது சிவசேனாவின் விதிகளுக்கு உட்பட்டு இல்லை. இதனால் சிவசேனாவின் கட்சி தலைவர் கட்சியில் இருந்து ஒருவரை தலைவராக இருப்பவர் நீக்கம் செய்ய முடியாது. அதன்படி பார்த்தால் கட்சியின் தலைவராக உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அல்லது பிறரை கட்சியில் இருந்து நீக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை. அதனால் 2022 ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டேவை கட்சியில் இருந்து உத்தவ் தாக்கரே நீக்கியது கட்சி விதிகளின் படி செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.

இதன்மூலம் மகாராஷ்டிரா சட்டசபை சிவசேனா குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை உத்தவ் தாக்கரே நீக்கியது செல்லாது இந்த நீக்க உத்தரவை பிறப்பிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என்பதை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தீர்ப்பாக வழங்கி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+