Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிக்கன் லெக் பீஸ் சாப்பிட்டே பேமஸ் ஆன ஜிம் ஓனர் உல்ஹாக் - இப்போ என்ன பண்றாரு பாருங்க

உல்ஹாஸ் என்பவர் சிக்கன் லெக் பீஸ் சாப்பிடும் வீடியோவை எடுத்து டிக்டாக்கில் வெளியிட்டே உலக அளவில் பேமஸ் ஆனவர். இப்போது டிக் டாக் தடைக்குப் பிறகு ரொம்பவே தனிமையில் இருப்பது போல பீல் பண்ணுகிறாராம்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: சிக்கன் லெக் பீஸ் பிரியாணியில் கிடைத்தால் அதிர்ஷ்டம் அடித்தது போல உணர்வார்கள் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அந்த அளவிற்கு பலருக்கு லெக்பீஸ் மீது ஒரு பிரியம். கோழியின் கால் எலும்பை பிடித்து சதைப்பிடிப்பான கறியை கடித்து ருசித்து சாப்பிடுவதே அலாதியான சுவை. அப்படி சிக்கன் லெக் பீஸ் சாப்பிட்டு அதை டிக் டாக் வீடியோவில் போட்டு உலக பிரபலம் ஆகியிருக்கிறார் ஒரு மனிதர். இவர் சாப்பிடும் சிக்கன் லெக் பீஸ் அழகை பார்க்கவே லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள், அதுவும் டிக்டாக் தடைக்கு முன்பாக போட்ட சிக்கன் லெக் பீஸ் வீடியோவை பல லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

மும்பையைச் சேர்ந்த ஜிம் ஓனர்தான் உல்ஹாக். 41 வயதாகும் இவருக்கு இரண்டு டீன் ஏஜ் பிள்ளைகள் இருக்கிறார்கள். டிக்டாக் வந்த புதிதில் நிறைய பேர் டயலாக், நடனம், டூயட் காட்சிகளை பதிவிட இவரோ சாப்பிடுவதை போட ஆரம்பித்தார். அதற்கும் ரசிகர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள்.

Ulhas Kamathes Chicken Leg famous On TikTok Before Ban

டிக்டாக்கில் @Ulhaskamathe என்ற பெயரில் உள்ள இவரின் வீடியோ சர்வதேச அளவில் வைரலானது. ஆரம்பத்தில் இருந்தே பல லட்சம் பாலோயர்கள் கிடைத்தனர். இதனால் விதம் விதமாக ரகம் ரகமாக சிக்கன் லெக்பீஸ் சாப்பிட ஆரம்பித்தார்.

சிக்கன் லெக்பீஸ் வீடியோ கேமும் போட அதுவும் செம பிக்அப். எல்லாமே டிக்டாக் இருக்கும் வரைக்கும்தான். இந்தியா சீனா எல்லைப்பிரச்சினையில் டிக்டாக்கிற்கு வந்தது ஆப்பு. அது பல கதாநாயகர்கள், கதாநாயகிகளின் மனதில் சோகத்தை ஏற்படுத்தி விட்டது. இந்தியாவில் கடந்த மாதம் டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர் பலரும் எதையோ இழந்தது போல தனிமையில் இருக்கிறார்கள். அதிலும் இந்த உல்ஹாஸ் ரொம்பவே ஃபீல் பண்ணுகிறாராம்.

சிக்கன் லெக்பீஸ் சாப்பிட்டே டிக்டாக்கில் 12 லட்சத்திற்கு அதிகமான பாலோயர்களை பெற்ற இவருக்கு இப்போது இன்ஸ்டாகிராமில் அந்த அளவிற்கு லைக் கிடைப்பதில்லை பார்வையாளர்களும் வருவதில்லையாம். பலரும் இவரது வீடியோவை மிஸ் செய்வதாகவும் கூறி வருத்தப்படுகிறார்களாம். கடைசி கடைசியாக இவர் போட்டோ வீடியோவை பல லட்சம் பேர் பார்த்து ரசித்து லைக் செய்திருக்கிறார்கள்.

நாமெல்லாம் சிக்கன் லெக் பீஸ் பிரியாணியில் சேர்த்து சாப்பிடுவோம், அல்லது வருவலாக சாப்பிடுவோம் இந்த மனிதர் எப்படி எல்லாம் சிக்கன் லெக் பீஸை சாப்பிடுகிறார் பாருங்கள். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போது சிக்கன் லெக்பீஸ் சாப்பிடுவதை பதிவிட ஆரம்பித்திருக்கிறார்.

லஸ்சி டிராகன் சிக்கன் வித் சிக்கன் லெக் பீஸ்

லஸ்சி உடன் டிராகன் சிக்கனும் சிக்கன் லெக்பீசும் வைத்து சாப்பிட்டு பலருக்கும் சிக்கன் சாப்பிடும் ஆசையை தூண்டுகிறார். ஆனாலும் டிக்டாக்கில் கிடைத்தது போல இதில் ஃபாலோயர்கள் கிடைக்கவில்லை என்பதுதான் இவரது சோகம்.

சில்லிநூடுல்ஸ் வித் சிக்கன் லெக் பீஸ்

சில்லி நூடுல்ஸ்க்கு சாஸ் தொட்டுக்கொள்வோம் இவர் அதற்கும் சிக்கன் லெக்பீஸ்தான் கடித்து சுவைத்து சாப்பிடுகிறார். பார்க்கும் நமக்கு எச்சில் ஊற அதை அப்படியே விழுங்கிக்கொள்ள வேண்டியதுதான்.

தேச பாதுகாப்பிற்காக நாடு எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவதாக கூறும் உல்ஹாஸ் விரைவில் இருநாடுகளின் உறவில் ஒற்றுமை ஏற்படும் என்றும் டிக்டாக் மீண்டும் வரும் என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார். முன்பெல்லாம் நான் பல லட்சம் பேருடன் சாப்பிடுவது போல நினைப்பேன். இப்போதோ தனியாக சாப்பிடுவது போல உணர்கிறேன் என்கிறார் உல்ஹாஸ். நீங்க மட்டுமில்ல நிறைய டிக்டாக் ஹீரோ, ஹீரோயின்ஸ் அப்படித்தான் ஃபீல் பண்றாங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+