முதலில் சீனாவை லடாக், அருணாச்சலில் இருந்து விரட்டுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து சிவசேனா
மும்பை: மணிப்பூர், லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து சீனாவை விரட்டிவிட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைப்பது பற்றி பேசுங்கள் என மத்திய பாஜக அரசுக்கு உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளான கில்கிட், பல்டிஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. இப்போராட்டங்கள், தற்போது நாங்கள் இந்தியாவுடனேயே இணைகிறோம் என புதியதாக உருமாறி இருக்கிறது. சலோ! சலோ! கார்கில் சலோ என இந்தியாவை நோக்கி இந்தப் போராட்டங்களில் முழக்கங்கள் எழுப்பப்படுவதாக சமூக வலைதளப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் விகே சிங் கூறுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இந்தியாவுடன் தாமாகவே இணையும் அதுவரை காத்திருப்போம் என்றார்.
பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மீர் குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது: எங்களுக்கும் "அகண்ட பாரத" கனவு என்பது இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதில் எப்போதும் உறுதியாகவே இருக்கிறோம்.
ஆனால் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசுகிற மத்திய அமைச்சர் விகே சிங், ராணுவ தளபதியாக இருந்தார். அப்போது அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கும் நடவடிக்கைகளை செய்திருக்க வேண்டும். இப்போது எப்படி இணைத்துவிட முடியும்? இருந்தபோதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதை நாம் வரவேற்கிறோம்.
அதற்கு முன்னதாக மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை உருவாக்குங்கள். சீனா, மணிப்பூரில் ஊடுருவி இருக்கிறது. லடாக்கில் சீனா ஊடுருவி நமது நிலத்தை ஆக்கிரமித்து என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அருணாச்சல பிரதேச மாநிலத்தையே தங்களது நாட்டின் பகுதியாக இணைத்து வரைபடம் வெளியிட்டிருக்கிறது சீனா. ஆகையால் இந்த பிரச்சனைகளுக்கு முதலில் முடிவு கட்டுங்கள்.. அப்புறமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கலாம். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications