நடிகர் தர்மேந்திரா உடல்நிலை எப்படி இருக்கு? குடும்பத்தினர் கொடுத்த விளக்கம்!
மும்பை: முதுபெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் உடல்நிலை குறித்து தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். தர்மேந்திரா உடல்நிலை சீராக உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முதுபெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) சமீபத்தில் மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்களைக் கிளப்பிவிட்டது. தர்மேந்திரா, மூச்சு திணறல் ஏற்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியுவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதேசமயம், தர்மேந்திரா விரைவில் தமது 90வது பிறந்தநாளை கொண்டாட உள்ள சூழலில் இது ஒரு வழக்கமான பரிசோதனை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் தர்மேந்திராவின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான ஹேமா மாலினி விளக்கம் அளித்தார். "அவர் விரைவில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார். நடிகர் தர்மேந்திராவின் மகனும் நடிகருமான சன்னி தியோலும் மருத்துவமனைக்கு வருகை தந்தார். தர்மேந்திரா வென்டிலேட்டரில் இருப்பதாக வெளியான வதந்திகளை அவரது குழுவினர் நிராகரித்தனர்.
"தர்மேந்திரா உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை தொடர்பான அப்டேட் கிடைக்கும்போது பகிரப்படும். தயவுசெய்து அவரது உடல்நிலை குறித்து தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம். அவரது குடும்பத்தின் தனி உரிமையை மதிக்கவும் அவர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்." என சன்னி தியோல் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் தனது குடும்பத்தினருடன், ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு வந்து தர்மேந்திராவைச் சந்தித்து, உடல் நலன் பற்றி விசாரித்தார். அதேபோல சல்மான் கானும் தர்மேந்திராவை மருத்துவமனையில் சந்தித்தார். தர்மேந்திரா விரைவாக குணமடைய நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் பிரார்த்தனை செய்துள்ளார்.
சுமார் 60 வருடங்களாக பாலிவுட் திரையுலகில் வலம் வந்தவர் தர்மேந்திரா. தர்மேந்திராவின் மனைவி ஹேமாமாலினி. தர்மேந்திராவின் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல், மகள் ஈஷா தியோல் ஆகியோர் திரை உலகில் பிரபலமாக இருக்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications