"சொத்து தகராறு.." பழம்பெரும் இந்தி நடிகையை சொந்த மகனே.. பேஸ்பால் பேட்டால் அடித்து கொன்ற கொடூரம்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை வீணா கபூரை அவரது சொந்த மகனே மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
பாலிவுட்டில் பிரபல பழம்பெரும் நடிகை வீணா கபூர். இவர் இந்தி திரைப்படங்களிலும், இந்தி டிவி தொடர்களில் நடித்துள்ளார். இவர் மகாராஷ்டிராவில் மும்பையில் வசித்து வருகிறார்.
74 வயதாகும் இவரைச் சொந்த மகனே கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவையே மிஞ்சும் வகையில் இவர் மோசமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்ரா
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் வீணா கபூர் வசித்து வந்தவர். அமெரிக்காவில் உள்ள இவரது மூத்த மகன் கடந்த செவ்வாய்க்கிழமை வீணா கபூருக்குப் பல முறை போன் செய்துள்ளார். இருப்பினும், யாருமே போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து உறவினருக்கு போன் செய்த அவர், வீட்டிற்குச் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அந்த உறவினர் வீட்டிற்கு வந்த போது அங்கு வீணா கபூர் இல்லை. இதையடுத்து இது தொடர்பாக போலீசாரில் புகாரும் அளித்துள்ளனர்.

பேஸ்பால் பேட்
மும்பையில் வசித்து வரும் அவரது இளைய மகனான சச்சினிடம் போலீசார் தாய் குறித்துக் கேட்டுள்ளனர். 43 வயதான சச்சினின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்த நிலையில், அவரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது தான் அவர் தனது தாயைக் கொன்றதாக அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தார். தாய் என்று கூட பார்க்காமல் பேஸ்பால் பேட்டை கொண்டு தாயைப் பல முறை தலையிலேயே தாக்கி கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தாய் வீணா கபூர் சம்பவ இடத்திலேயே துடிக்கத் துடிக்க உயிரிழந்துள்ளார்

சொத்து தகராறு.
சொத்து தகராற்றில் வீணா கபூரை கொன்றதாக அவரது மகன் சச்சின் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், "தாயாரின் தலையில் பேஸ்பால் பேட்டை கொண்டு அவர் பலமுறை அடித்துள்ளார்.. யாரிடமும் மாட்டிக் கொள்ளக் கூடாது என உயிரிழந்த தாயாரின் உடலை அப்புறப்படுத்தியுள்ளான். வீட்டிலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ள ஒரு காட்டில் இருக்கும் ஆற்றில் தாய் வீணா கபூரின் உடலை வீசியுள்ளார். மும்பை ஜூஹு பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது" என்று போலீசார் தெரிவித்தனர்.

என்ன நடந்தது
சொத்து தகராற்றில் வீணா கபூரை அவரது சொந்த மகனே படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீணா கபூருக்கு அப்பகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடிக் குடியிருப்பு இருந்துள்ளது. அதைத் தனது பெயருக்கு மாற்றித்தரும்படி சச்சின் கேட்டுள்ளார். இதற்கு வீணா கபூர் மறுத்தாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் ஆத்திரமடைந்த சச்சின், வீணா கபூரை பேஸ்பால் பட்டையால் அடித்தே கொலை செய்துள்ளார்.

இருவர் கைது
அதன் பின்னர் வீட்டில் வேலை செய்து வந்த மண்டல் என்பவரின் உதவியுடன் உடலை அப்புறப்படுத்தியுள்ளார், அதாவது இருவரும் இணைந்து கொலை செய்யப்பட்ட வீணா கபூரின் உடலைப் பெட்டி ஒன்றில் போட்டுள்ளனர். அதை காரில் எடுத்துச் சென்று இவரும் மாதேரான் மலை பள்ளத்தாக்கில் ஓடும் ஆற்றில் வீசியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சச்சினை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த சோட்டு மண்டலையும் போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட வீணா கபூரின் உடலைத் தேடும் பணிகளை போலீசார் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications