"முஸ்லிம்கள் வரக்கூடாது.." ஆதார் அட்டை செக், நெற்றியில் திலகம் கட்டாயம்! நவராத்திரி கட்டுப்பாடுகள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள நவராத்திரி விழாவையொட்டி நடத்தப்படும் கர்பா மற்றும் தாண்டியா நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்கக் கூடாது என விஸ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது. மேலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

நவராத்திரி பண்டிகை தென்னிந்தியாவை காட்டிலும் வடஇந்தியாவில் மிக பெரியளவில் கொண்டாடப்படும். ஆட்டம் பாட்டம் பக்தி என 9 நாட்கள் கோலாகலமாக இருக்கும். கர்பா மற்றும் தாண்டியா நிகழ்ச்சிகளில் எல்லாம் சிறப்பாக நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 11ஆம் தேதி தொடங்குகிறது.

Navaratri rules

முஸ்லீம்களுக்கு தடை

இதற்கிடையே கர்பா மற்றும் தாண்டியா நிகழ்ச்சிகளில் முஸ்லீம்கள் பங்கேற்க கூடாது என விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. முஸ்லீம்கள் பங்கேற்பதை தடுக்க பங்கேற்பவர்களின் ஆதார் அட்டைகளை சரிபார்ப்பது, பங்கேற்பாளர்களின் நெற்றியில் திலகம் இடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை விஎச்பி பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக விஎச்பி செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராஜ் நாயர் கூறுகையில், "நவராத்திரி விழா இந்து கடவுளை வழிபடுவதை மையமாகக் கொண்டது என்பதால், முஸ்லிம் சமூகத்தினர் கர்பா மற்றும் தாண்டியா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தேவையில்லை. நவராத்திரி என்பது பாடல் மற்றும் நடனம் மட்டுமல்ல. இந்த விழா அம்மனை வழிபடுவதற்கானது. சிலை வழிபாட்டுக்கு எதிரான முஸ்லிம்கள் ஏன் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும்? இந்த கட்டுப்பாடுகள் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைத்து இல்லை. இந்து விழாக்களின் கலாச்சார தன்மையை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.

கண்டனம்

இருப்பினும், விஎச்பியின் இந்த அறிவிப்புக்கு அங்குள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இதன் அரசியலமைப்பு சட்டபூர்வ தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், ஆர்எஸ்எஸ் தலைமையகம் விஎச்பியின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறதா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக உத்தவ் சிவசேனா பிரிவு எம்.பி. சஞ்சய் ராவத், விஎச்பியின் நிலைப்பாட்டை விமர்சித்ததுடன், நியூயார்க்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசிய கருத்துகளையும் சுட்டிக்காட்டினார்.

ஆர்எஸ்எஸ்

நியூயார்க் நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், "இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்று எந்த இந்துவாவது நினைத்தால், அவர் இந்துவாக இருக்க மாட்டார். ஒவ்வொரு மனிதருக்கும் கண்ணியம் உள்ளது. மனிதர்களுக்கு இடையே வேறுபாடு இல்லை" என்று கூறியிருந்தார்.

இது குறித்து ஸ்ரீராஜ் நாயரிடம் கேட்கப்பட்டபோது, ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்து குறித்து விஎச்பி கருத்து தெரிவிக்காது என்றார். மேலும், "நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியையும் நாங்கள் நம்புகிறோம்" என்றும் தெரிவித்தார். அதேநேரத்தில் நவராத்திரியின் மத நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகளை ஏற்று கொள்ளாத முஸ்லிம்களுக்காக விஎச்பி தனது வழிகாட்டுதல்களை ஏன் தளர்த்த வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

அதேநேரம் விஎச்பியின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என காங்கிரஸ் எம்எல்ஏ அமின் படேல் விமர்சித்தார். விழாக்கள் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துபவை என்றும் தாண்டியா மற்றும் நவராத்திரி நிகழ்ச்சிகளுக்கு பிற சமூகத்தினரும் அழைக்கப்படுவது வழக்கம் என்றும் அவர் கூறினார். சரத் பவார் என்சிபி செய்தித் தொடர்பாளர் கிளைட் க்ராஸ்டோவும் விஎச்பியின் அறிவிப்பை விமர்சித்தார். இதனால் மகாராஷ்டிராவில் அமைதியும் நல்லிணக்கமும் பாதிக்கப்படலாம் என்றும் விஎச்பி சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் உத்தரவிடுவதை பாஜக அரசு அனுமதிக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மகாராஷ்டிரா மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பியாரே கான், முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக பொது நிகழ்ச்சிகளில் இருந்து விலக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும், "ஒவ்வொருவருக்கும் தங்களது மத விழாக்களை கொண்டாட உரிமை உள்ளது. விழாக்கள் மக்களை இணைக்க வேண்டும்.. பிரிக்கக் கூடாது. அதேநேரம் யாரை நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டும் என்பது ஏற்பாட்டாளர்களின் முடிவு" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+