"மிட்நைட்டில்".. ஆசை ஆசையாய், ஆபாச வீடியோ பார்க்கபோன 83 வயது ஆபீசர்.. கப்பலேறிய மானம்.. மிரண்ட போலீஸ்
ஆபாச வெப்சைட் மூலம் பணம் பறித்த கும்பல் குறித்து புகார் தரப்பட்டுள்ளது
மும்பை: 83 வயது தாத்தாவுக்கு வந்த சபலத்தினால், கடைசியில் மானம் போனதுதான் மிச்சம்.. மும்பையில் இந்த சம்பவம் நடந்துள்ளது...!!
தொழில்நுட்பம் பெருக பெருக, குற்றங்களும் பெருக ஆரம்பித்துவிட்டன.. வளர்ச்சி என்ற நோக்கில் விஞ்ஞானத்தை அணுகினாலும், அதனால் ஏற்படும் வன்முறைகளையும், தவறுகளையும் தடுக்க முடிவதில்லை.
சமீப காலமாகவே, பணம், நகைகளை பறிக்கும் மோசடி கும்பல்கள் ஆன்லைனில் வட்டமடித்து வருகிறார்கள்.. செல்போன்களை, யாராலுமே தவிர்க்க முடியாத பட்சத்தில் இதை தான் தங்களுக்கு சாதகமாக சிலர் பயன்படுத்தி நூதன கொள்ளைகளில் இறங்கி உள்ளனர்.

சபலிஸ்ட்ஸ்
மும்பையிலும் சில நாட்களுக்கு முன்புகூட ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. ஒரே ஒரு பெண், அதுவும் ஆபாசமாக திட்டி, ஆண்களை விரட்டி விரட்டி பணம் பறித்துள்ளார்.. இவரிடம் 57 வயது நபர் சிக்கி கொண்டார்.. இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், ஆபாச வீடியோ காலில் பேச விருப்பமா? என்று கேட்டுள்ளனர்.. இதை பார்த்ததுமே, அந்த அதிகாரிக்கு சபலம் வந்து, உடனே, ஆமாம், விருப்பம்தான் என்று பதில் தந்துள்ளார்.. உடனே அந்த அதிகாரிக்கு வீடியோ காலில் ஒரு பெண் வந்து நிர்வாணமாகவே நின்றுள்ளார்..

ஆடைகள்
பிறகு, அந்த அதிகாரியையும் டிரஸ்களை கழற்றுமாறு சொல்லியிருக்கிறார்... ஏற்கனவே மண்டை நிறைய சபலத்தில் சிக்கியிருந்த அதிகாரியும், அந்த பெண் சொன்னது போலவே, தன் ஆடைகளை களைந்துள்ளார். அதிகாரி நின்ற அந்த கோலத்தை, அந்த அப்படியே ரெக்கார்டு செய்து வைத்துக் கொண்டார் அந்த பெண்.. இப்படியே சில நாட்கள் சென்றதும், ஒருகட்டத்தில், தனக்கு அந்த வீடியோ கால் அழைப்பு தேவையில்லை என்று அதிகாரி சொல்லி உள்ளார்..

நிர்வாண போஸ்
அதற்கு அந்த பெண், "அப்படின்னா, நாங்கள் கேட்கும் பணத்தை தந்துவிடு.. இல்லாவிட்டால், இதுவரை எடுத்த மொத்த ஆபாச வீடியோக்களையும் எல்லாருக்கும் அனுப்பி விடுவோம்" என்று மிரட்டினார்.. அதுவும், அடுத்த கொஞ்ச நேரத்தில், யாரோ ஒரு நபர், அதிகாரிக்கு போன் செய்து, தான் ஒரு டெல்லி போலீஸ் எனவும், ஆபாச வீடியோவில் நிர்வாணமாக நின்றாயா? என்றும் விசாரித்துள்ளனர்.. இதைக் கேட்டதும் அதிகாரிக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது..

கும்பல்
அந்த வீடியோக்களை வெளியே விடாமல் இருக்க வேண்டுமானால், பணம் வேண்டும் என்று மிரட்டி உள்ளார்.. பயந்துபோன அதிகாரியும், 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறார்.. அப்போதும் அந்த கும்பல் மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்டவும்தான் போலீசுக்கு சென்று புகார் தந்தார் அந்த அதிகாரி.. இதே இப்போது இதுபோலவே ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.. அந்த அதிகாரியாவது 57 வயது, இந்த தாத்தாவுக்கு 83 வயதாகிறதாம்..

வார்னிங் மெசேஜ்
மும்பையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்துவருகிறார்.. மிகப்பெரிய தொழிலதிபரும்கூட.. கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி மிட்நைட்டில், திடீரென ஆபாச படம் பார்க்க ஆசை வந்துவிட்டதாம்.. அதனால், கம்ப்யூட்டரில் அது தொடர்பான வெப்சைட் ஒன்றிற்கு சென்றாராம். அப்போது அந்த வெப்சைட்டில் ஒரு வார்னிங் மெசேஜ் வந்துள்ளது. அதில் ஆபாச படம் பார்ப்பது சட்டவிரோதமானது என்றும் அதையும் மீறி பார்த்தால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்ததாம்.

மானமே போச்சு
அதுமட்டுமின்றி ஒருநாளுக்குள் ரூ.29 ஆயிரம் செலுத்தினால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் அந்த வார்னிங் மெசேஜில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைப்பார்த்து பதறிப்போன அந்த தாத்தா, கைது செய்துவிட்டால் மானம் மரியாதையே போய்விடுமே என்று பயந்துபோய், அந்த அபராத தொகையை செலுத்த முடிவு செய்துள்ளார்.. உடனே தன்னுடைய ஏடிஎம் கார்டு மூலம் ஆன்லைனில் ரூ.32 ஆயிரத்தை செலுத்தி உள்ளார்... பிறகு, தன்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களை பார்த்த பிறகுதான், அவர் அனுப்பிய அந்த தொகை, போலீசுக்கு போகவில்லை என்று தெரியவந்துள்ளது.

கப்பலேறியாச்சு
அப்போதுதான தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதும் தாத்தாவுக்கு தெரியவந்தது.. இதையடுத்து உடனடியாக பந்த்ரா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்.. நடந்ததையெல்லாம் சொல்லி புகார் தந்தார்.. அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீசாரும், சம்பந்தப்பட்ட வங்கி கணக்கின் விவரங்களை வாங்கி அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... 83 வயசில் தாத்தாவுக்கு இதெல்லாம் தேவையா?!!












Click it and Unblock the Notifications