பிரபல பாடகர் சோனு நிகாம் மீது தாக்குதல்.. சிவசேனா உத்தவ் தாக்கரே தரப்பு எம்எல்ஏவின் வெறிச் செயல்!
செல்பி எடுக்க அனுமதிக்காததால் பிரபல பாடகர் சோனு நிகாம் மீது உத்தவ் தாக்கரே கட்சியின் எம்எல்ஏ தாக்குதல்.
மும்பை: பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம் மீது சிவசேனா கட்சியின் எம்எல்ஏ மகன் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் அவர் கீழே விழுந்தார். அவருடைய பாதுகாவலர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி பாடகராக உள்ளார் சோனு நிகாம். இவர் பாடகர் மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், நடிகரும் ஆவார். இந்தி, கன்னட சினிமாவில் இவர் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றி பெற்ற பாடகர் ஆவார். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை மத்திய அரசு கொடுத்தது.
இவர் இந்தி, கன்னடம் மட்டுமல்லாமல் பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், ஒடியா, போஜ்புரி, குஜராத்தி, மலையாளம், நேபாளி, துலு, சத்தீஸ்காரி உள்ளிட்ட மொழிகளிலும் பாடியுள்ளார்.

மாடர்ன் ரஃபி
இவரை மாடர்ன் ரஃபி என அழைக்கிறார்கள். ஜூன்ஸ் படத்தில் இடம்பெற்ற வாராயோ தோழி பாடலை சோனு நிகாம் பாடியுள்ளார். பார்த்தேன் ரசித்தேன் படத்தில் இருந்து பூவே புன்னகை காட்டு , மதராசபட்டினத்தில் ஆருயிரே, காதலே சுவாசம் படத்தில் சொக்குதே காதல் சொக்குதே, கிரீடம் படத்தில் இடம் பெற்ற விழியில் உன் விழியில் உள்ளிட்ட பாடல்களை தமிழில் பாடியுள்ளார்.

சோனு நிகாம்
இந்த நிலையில் சோனு நிகாம் அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை நடத்துவார். அந்த வகையில் அவர் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் இசை கச்சேரியை நடத்தினார். இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவர் சூப்பர் ஹிட் பாடல்களை எல்லாம் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சிவசேனா கட்சியின் (உத்தவ் தாக்கரே அணி) எம்எல்ஏ பிரகாஷ் படேர்பேகரின் மகன் ஸ்வப்னில் கலந்து கொண்டார்.

சோனு நிகாமுடன் செல்பி
நிகழ்ச்சி முடிந்ததும் மேடைக்கு அவசரமாக வந்தார் ஸ்வப்னில். அவர் சோனு நிகாமுடன் செல்பி எடுக்க விரும்பினார். ஆனால் அதற்கு பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ மகன் ஸ்வப்னில் சோனு நிகம் மேடையில் இருந்து கீழே இறங்கும் போது அவரது பாதுகாவலரை தள்ளிவிட்டார். மேலும் சோனு நிகாமையும் தள்ளிவிட முயன்றார்.

செம்பூர் பகுதி
இதில் சோனு நிகாமுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் பாதுகாவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் செம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் எம்எல்ஏ மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

செல்பி எடுக்க விருப்பம்
இதுகுறித்து சோனு நிகாம் கூறுகையில் ஒருவரை வலுக்கட்டாயமாக செல்பி எடுக்க விரும்புவது தவறு. என்னிடம் செல்பி எடுக்க ஸ்வப்னில் கேட்டார். ஆனால் நான் அதற்கு மறுத்தேன். உடனே அந்த நபர் என்னை இழுத்தார். அப்போது தான் அவர் எம்எல்ஏவின்மகன் என எனக்கு தெரிந்தது. எனது பாதுகாவலர்கள் ஹரி பிரசாத் வலுக்கட்டாய செல்பியில் இருந்து என்னை பாதுகாக்க வந்த போது அவரையும் எம்எல்ஏ மகன் தள்ளிவிட்டார். என்னையும் தள்ளிவிட்டார். ரப்பானி என்னை காப்பாற்ற வந்த போதும் அவரையும் தள்ளிவிட்டார். ரப்பானிகீழே விழுந்த போது அங்கு எந்த வித இரும்பு தளவாடங்கள் ஏதும் அங்கு இல்லை என்றார்.

உண்மையான முகம்
இதுகுறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறுகையில் உத்தவ் சேனாவின் உண்மையான முகம் மீண்டும் வெளியே வந்துவிட்டது. ஒரு செல்பிக்காக இப்படியா தாக்குதல் நடத்துவது? இது மிகவும் அராஜக போக்கையே காட்டுகிறது. இது முதல் சம்பவம் அல்ல. சிவசேனா கட்சியினர் 60 வயது கடற்படை முன்னாள் வீரரை தாக்கியுள்ளனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications