நீங்க யாரா இருந்தா எனக்கென்ன.. நடிகை டாப்ஸி பன்னுவை கண்டுகொள்ளாத ஸ்விக்கி பணியாளர்.. வீடியோ
மும்பை: நீங்க யாராக இருந்தால் எனக்கென்ன என்று நடிகை டாப்ஸி பானுவை கண்டுகொள்ளாமல் ஸ்விக்கி பணியாளர் ஒருவர் கடந்த சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேநேரம் மீடியாக்களும், சில ரிப்போர்ட்டர்களும் (பாப்பராசிக்கள் என்று அழைக்கப்படுவார்கள்) நடிகை டாப்ஸி எப்போது வெளியே வருவார் என்று காத்திருந்து வீடியோ எடுத்தன.
நடிகர், நடிகைகள் வெளியே சர்வ சாதாரணமாக சுற்றிவிட முடியாது. நம்மூர் மெரினா கடற்கரையில் விஜய் அல்லது அஜித் சர்வ சாதாரணமாக சென்றுவந்துவிட முடியாது. இதேபோல் பிரபலமான நடிகர், நடிகைகள் சுதந்திரமாக எங்குமே வெளியில் சென்று திரும்ப முடியாது.

நடிகர், நடிகைகள் கடவுள் போல் ஆராதிப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களின் அன்பு தொல்லைக்கு பயந்து வெளியில் சுதந்திரமாக சென்று வர நடிகர், நடிகைகள் விரும்புவது இல்லை.. தமிழ்நாட்டில் இப்படி என்றால், பாலிவுட் உலகமான மும்பையிலும் இதேநிலை தான். அங்கு நம்மூர் மீடியாக்களை விடவும் ஒருபடி மேலாக மீடியாக்கள் உள்ளன.
ரசிகர்களை விட சில மீடியாக்கள், நடிகர், நடிகைகள் வெளியில் எப்போது வருவார்கள் என்பதற்காக அவர்கள் வீட்டு வாசலிலேயே காத்திருப்பார்கள். அவர்கள் வெளியில் வந்தால் வீடியோ எடுப்பார்கள்.. அப்படி நடிகர் மற்றும் நடிகைகள் அதிகம் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மீடியாவை சேர்ந்தவர்கள் கேமராக்களுடன் காத்திருக்கும் காட்சிகளை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.
நடிகைகள் வெளியில் வரும் காட்சிகள், கடைகளுக்கு செல்லும் காட்சிகள், விழாக்களுக்கு செல்லும் காட்சிகளை வீடியோ எடுத்து அதனை மீடியாவிற்கு விற்கும் வேலைகளில் ஈடுபடுவோரை மும்பையில் பாப்பராசி என்று அழைப்பார்கள். இவர்களும் மீடியாவைச் சேர்ந்தவர்கள் தான். பொதுவாக நடிகர், நடிகைகள் வெளியில் வந்தால், அவர்களை அழகாக படம்பிடிக்கவும், அவர்களிடம் பேசவும் மீடியாக்கள் மும்பை நகரங்களில் காத்திருக்கும் நிலையில், ஸ்விக்கி பணியாளர் ஒருவர், நடிகை டாப்ஸி பானுவை சுத்தமாக கண்டு கொள்ளவில்லை..

நீங்க யாராக இருந்தால் எனக்கென்ன என்று நடிகை டாப்ஸி பானுவை கண்டுகொள்ளாமல் ஸ்விக்கி பணியாளர் சென்றார்.. நடிகை டாப்ஸி பானுவும் எதை பற்றியும் கவலைப்படாமல் அவர் பாட்டுக்கு நடந்து சென்று காரில் ஏறி சென்றார், இதுபற்றி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
23 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஸ்விக்கி ஏஜெண்ட் ஒருவர் உணவு டெலிவரிக்காக நடிகைகள் தங்கியுள்ள கட்டிடத்திற்கு வருகிறார். அப்படி வந்த ஸ்விக்கி பணியாளர், உணவு பாக்ஸை வழங்குவதற்காக கட்டிட வளாகத்திற்குள் நுழைந்து செல்கிறார்கள. ஆனால் வாசலுக்கு வெளியே, பாப்பராசிகள் நின்றுகொண்டு, அந்த ஸ்விக்கி பணியாளரை சத்தம் போட்டு, பிரேமை மறைக்காமல் வெளியே போ, கேமரா மறைக்கிறது, டாப்ஸி பானுவை மறைக்காமல் தள்ளிபோ என்று குறிப்பிடுகிறார்கள். அதை பார்த்த ஸ்விக்கி பணியாளர், என்னடா நடக்கிறது என்பதை கவனிக்க திரும்பி பார்த்த போது, பாப்பராசிகள் வாசலில் நிற்பதை கவனிக்கிறார்..
Hey @Swiggy, this delivery partner deserves an incentive for his dedication!! 😬😂
— Divya Gandotra Tandon (@divya_gandotra) May 19, 2024
pic.twitter.com/8MM6RfDZ2V
ஆனால் டாப்ஸி பானுவை பார்த்த அவர், அவரை சுத்தமாக கண்டு கொள்ளாமல் உணவு பாக்ஸை விநியோகிக்க உள்ளே சென்றுவிடுகிறார்.. .அப்போது பாப்பராஸி ஒருவர், டாப்ஸி, தயவு செய்து நில்லுங்கள் என்று கெஞ்சுகிறார். அப்போது டாப்ஸி, இங்கே நீங்கள் தடுத்து நிறுத்தினால், நான் எப்படி பார்டிக்கு செல்வது என்று கேட்டுவிட்டு காரில் ஏறி செல்கிறார். இப்படியாக அந்த வீடியோ முடிகிறது..
இதை பார்த்த நெட்டிசன்கள், நடிகைகளை எதிர்பார்த்து வெளியில் நிற்கும் மீடியாக்களுக்கு ஸ்விக்கி பணியாளர் நல்ல பாடத்தை கற்று கொடுத்துள்ளார். எதற்காக நடிகைகளை கண்டு கொள்ள வேண்டும்.. அவர்களும் சக மனிதர்கள் தானே.. ஏன் இப்படி மீடியாக்கள் இருக்கின்றன.. அந்த பகுதி மக்கள் நடிகைகளை சுத்தமாக கொண்டு கொள்வதே இல்லை என்று கூறியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications