கோயிலுக்கு வெளியே.. தலைக்குமேல் கால் வைத்து.. பக்தர்களுக்கு ஆசி வழங்கும் ஆச்சர்ய நாய்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோயிலுக்கு வெளியே பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் நாயின் வீடியோ வைரலாகியுள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா மாநில கோயில் ஒன்றில் பக்தர்களுக்கு கைக்கொடுத்து ஆசிர்வாதம் வழங்கும் நாயை நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள்.
விலங்குகளில் மனிதர்களின் உற்ற தோழனாக இருப்பது நாய்கள் தான். மனித இனத்துடன் சேர்ந்து வாழும் அவை தான் பல நேரங்களில் நமக்கு காவலர்களாக இருக்கின்றன. மேலும் நாய்களின் விஸ்வாசத்துக்கு அளவுகோல் கிடையாது. எனவே தான் நாய்கள் இந்த உலகில் மிக அன்பான, நட்பான உயிரினமாகக் கொண்டாடப்படுகிறது.
சமூகவலைதளங்களில் நாய்களின் வைரல் வீடியோக்கள் பல கொட்டிக்கிடக்கின்றன. பல வீடியோக்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

ஆசிர்வதிக்கும நாய்
மகாராஷ்டிரா மாநிலம் சித்தாதேக்கில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் கோயில் நுழைவு வாயிலில் ஓர் உயரமான மேடையில் நாய் ஒன்று அமர்ந்திருக்கிறது. கோயில் உள்ளே இருந்து வெளியே வரும் பக்தர்கள் அந்த நாயிடம் ஆசிர்வாதம் வாங்கிச் செல்கின்றனர்.

பக்தர்கள் ஆசிர்வாதம்
அதாவது கோயிலில் இருந்து வெளியே வரும் பக்தர் ஒருவர் நாய்க்கு முன்னால் தலையைக் குனிந்து கொள்கிறார். பதிலுக்கு அந்த நாய் அவரின் தலை மேல் கைவைத்து ஆசிர்வதிப்பது போல் சைகை செய்கிறது.

கைக்குலுக்கும் நாய்
மேலும், அந்த நாயை நோக்கி பக்தர்கள் சிலர் கோயிலில் இருந்து வெளியேறும்போது கைகளை நீட்டுகின்றனர். பதிலுக்கு அந்த நாயும் பக்தர்களுக்கு கை கொடுத்து அவர்களை வரவேற்கிறது. அருண் லிமாடியா என்பவர் இந்த நாயின் வீடியோவை சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். '

கொண்டாடும் நெட்டிசன்கள்
அதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த நாயை கொண்டாடி வருகின்றனர். அந்த வீடியோவுக்கு லைக்ஸ் மழை கொட்டுகிறது. 1.3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் மற்றும் 110 ஆயிரம் பார்வைகளையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது அந்த வீடியோ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications