விராட் கோலி இதை செய்திருக்க கூடாது! ‛செல்பி’ எடுக்கபோன மாற்றுத்திறனாளிக்கு நேர்ந்த கதி.. வீடியோ
மும்பை: மும்பை விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பார்த்ததும் மாற்றுத்திறனாளி ‛செல்பி' எடுக்க சென்றார். அப்போது அவரை விராட் கோலி கண்டுக்கொள்ளாமல் சென்றதோடு, மாற்றுத்திறனாளியை அவரது பாதுகாவலர்கள் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து அப்புறப்படுத்தியதையும் அவர் கண்டுக்கொள்ளவில்லை. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் விராட் கோலியை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ‛ரன் மெஷினாக' விராட் கோலி உள்ளார். தற்போது டி20, டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா அணியுடன் நடந்த 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றது.

இந்த போட்டியில் விராட் கோலி 2 சதம், ஒரு அரைசதம் அடித்து அசத்தினார். முதல் போட்டியில் 135 ரன், 2வது போட்டியி்ல 102 ரன், 3வது போட்டியில் 65 ரன் எடுத்து அவுட்டாகாமல் வெற்றியை உறுதி செய்தார்.
இந்நிலையில் தான் விராட் கோலி மற்றும் அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் தற்போது இணையதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு மும்பை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தான் காரணம். அதாவது விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே நடந்து வருகின்றனர். முதலில் விராட் கோலி வருகிறார். அவருக்கு பின்னால் அனுஷ்கா சர்மா வருகிறார்.

அப்போது மாற்றுத்திறனாளி ஒருவர் விராட் கோலியின் அருகே சென்று ‛செல்பி' கேட்கிறார். ஆனால் விராட் கோலி அவரை கண்டுக்கொள்ளாமல் செல்கிறார். இதையடுத்து பாதுகாவலர் மாற்றுத்திறனாளியை அங்கிருந்து இழுத்து செல்கிறார். இதனை விராட் கோலியும், அவருக்கு பின்னால் வந்த அனுஷ்கா சர்மாவும் கண்டுக்கொள்ளவில்லை.
இதனை அங்கிருந்த பிற ரசிகர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களிலும், சமூக வலைளதளங்கான எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ரெடிட் உள்ளிட்டவற்றிலும் பரவி வருகிறது. அதனை பார்க்கும் பலரும் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.
ரெடிட் தளத்தில் ஒருவர், "அவர்கள் செல்ஃபி எடுப்பதிலும், ஆட்டோகிராஃப் போடுவதிலும் சோர்வடைந்து விடுகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் ஒரு மாற்றுத்திறனாளியை அலட்சியம் செய்தது தவறு. அவரிடம் பேசி மறுப்பு தெரிவித்து இருக்கலாம். அதேபோல் தனது பாதுகாவலர்கள் அவரை இழுத்து செல்வதை பார்த்து தடுக்கவோ , தலையிடவோ அவர் முயற்சிக்காதது வருத்தமானது'' என்று கூறியுள்ளார்.
इसमें कोई संदेह नहीं है की #ViratKohli दुनियां के बेहतरीन खिलाड़ियों में से एक हैँ, लेकिन इंसान बेहतरीन होना ज्यादा सार्थक है, इस बच्चे के एक फोटो देने में आपको शायद 10 सेकंड भी नहीं लगते, लेकिन ये तस्वीर उस बच्चे के लिए क्या होती वो आप भी जानते हैँ pic.twitter.com/omG33eVHlW
— Singh is here (@Singhhagain) December 17, 2025
இன்னொருவரோ, ‛‛இது பிரபலங்களின் உண்மை முகம். நீங்கள் அவர்களின் வெற்றிக்காகப் பிரார்த்திக்கிறீர்கள். இணையதளங்களில் 24x7 என அவர்களுக்கு ஆதரவாக சண்டை போடுகிறீர்கள். ஆனால் அவர்கள் யாரையும் பொருட்படுத்துவதில்லை'' என காட்டமாக கூறியுள்ளார். இப்படியா பலரும் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவை ட்ரோல் செய்கின்றனர்.
அதேவேளையில் விராட் கோலியின் ரசிகர்கள் அவரது பழைய வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்பு விராட் கோலி மாற்றுத்திறனாளிகளை தேடிச்சென்று ஆட்டோ கிராஃப் போட்டு கொடுத்து போட்டோ எடுத்து கொண்ட வீடியோக்களை பலரும் பகிர்ந்து ஒரு சம்பவத்தை வைத்து விராட் கோலியின் குணத்தை மதிப்பீடு செய்ய வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications