Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே பிரச்சனை.. மும்பை ஐகோர்ட்டை நாடிய விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா.. அதிரடி உத்தரவு-என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் தீராத பிரச்சனை ஒன்றை சந்தித்து வரும் நிலையில் இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ள நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் எதற்காக மனு தாக்கல் செய்தார்? உத்தரவு என்ன? என்பது பற்றிய முழுவிபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவரது மனைவி அனுஷ்கா சர்மா. இந்தி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி கரம் பிடித்தார்.

தற்போது விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதி மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு

மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு

இந்நிலையில் தான் அனுஷ்கா சர்மா சார்பில் மும்பையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுஷ்கா சர்மா நடிகையாக இருந்தபோது 2012-13 முதல் 2013-14 காலக்கட்டத்தில் பல்வேறு விருது வழங்கும் விழாக்கள் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருமானம் ஈட்டியதோடு, நிகழ்ச்சியின் பதிப்புரிமையை பெற்றதாக கூறப்படுகிறது.

ரூ.1.6 கோடி வரி

ரூ.1.6 கோடி வரி

இந்த வேளையில் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு விற்பனை வரித்துறை (Sales Tax department) வழக்கத்தை விட அதிகளவில் வரி கட்டும்படி கூறியதாக கூறப்படுகிறது. அனுஷ்கா சர்மா சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து விருது நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பதிப்புரிமை பெற்றது தொடர்பாக 2012-13ல் ரூ.1.2 கோடி செலுத்த கூறப்பட்டு இருந்தது. அதன்பிறகு இது 2013-14ல் ரூ.1.6 கோடியாக அதிகரிக்கப்பட்டது.

 கடிந்து கொண்ட உயர்நீதிமன்றம்

கடிந்து கொண்ட உயர்நீதிமன்றம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுஷ்கா சர்மா 4 முறை மனுக்கள் தாக்கல் செய்தார். அனுஷ்கா சர்மா தனது வரி ஆலோசகர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்ததால் அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதோடு வரி ஆலோசகர் மூலம் மனுத்தாக்கல் செய்ய சட்டத்தில் இடம் உள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை நேரடியாக தாக்கல் செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பி கடிந்து கொண்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

அதிரடி உத்தரவு

அதிரடி உத்தரவு

இதையடுத்து அனுஷ்கா சர்மா சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் நிதின் ஜம்தார், அபய் அஹுஜா ஆகியோர் முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் விற்பனை வரித்துறையிடம் பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். அதோடு வழக்கு விசாரணை பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+