மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களின் சிறுநீரை அரசு சேகரிக்க வேண்டும்.. ஏன் தெரியுமா? நிதின் கட்கரி வித்தியாசமான யோசனை!

மனிதர்களின் சிறுநீரில் இருந்து யூரியா தயாரிக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

மும்பை: மனிதர்களின் சிறுநீரில் இருந்து யூரியா தயாரிக்க வேண்டும் என்றும், இதற்காக அரசு சிறுநீரை சேகரிக்கும் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

பொதுவாக மத்திய பாஜக சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வித்தியாசமான ஐடியாக்கள் மூலம் மக்களை கவர கூடியவர். இவர் கட்சியில் இருக்கும் சிலருக்கு எதிராகவே இவர் சமயங்களில் பேசி இருக்கிறார்.

மிகவும் வித்தியாசமாக யோசிக்க கூடிய இவர் இந்தியாவின் யூரியா தேவை குறித்து பேசி இருக்கிறார். யூரியாவை எப்படி நாட்டிலேயே தயாரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

<strong>காய்ந்து போன ஏரிகள்.. சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. கடைசியில் குவாரி தண்ணீர்தான் கதி</strong>காய்ந்து போன ஏரிகள்.. சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. கடைசியில் குவாரி தண்ணீர்தான் கதி

சிறுநீர் உரம்

சிறுநீர் உரம்

நிதின் கட்கரி தனது பேச்சில், நான் இந்திய விமான நிலையங்களில் கழிவறைகளில் சிறுநீரை சேகரிக்கும் வசதியை ஏற்படுத்த சொல்லி இருக்கிறேன். இதை செய்தால் நாம் நிறைய யூரியா தயாரிக்க முடியும். அதன்பின் யூரியாவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தேவை இருக்காது. இதனால் நமக்கு பெரிய பெரிய பலன் ஏற்படும்.

நல்ல உரம்

நல்ல உரம்

ஆனால் நாம் அதை எல்லாம் செய்யாமல் இருக்கிறோம். நிறைய சக்தியை நாம் வீணடிக்கிறோம். என்னுடன் மற்ற தலைவர்கள் ஒத்துழைக்கவில்லை. என்னுடைய ஐடியாக்கள் பலருக்கும் புரியவில்லை . என்னுடைய ஐடியாக்கள் நன்றாக இருக்கிறது. அதனால் யாருக்கும் புரியவில்லை.

தன்னுடைய தோட்டம்

தன்னுடைய தோட்டம்

நான் இதை குறித்து முனிசிபல் அலுவலகங்களிலும் உத்தரவு பிறப்பிக்க உள்ளேன். ஆனால் அங்கு இருப்பவர்கள் எல்லாம் மெதுவாக பணியாற்ற கூடியவர்கள். இதற்கு துடிப்பாக பணியாற்றும் நபர்கள்தான் வேண்டும். நான் என்னுடைய வீட்டு தோட்டத்திலேயே என்னுடைய சொந்த சிறுநீரை வைத்து யூரியா தயாரித்து இருக்கிறேன்.

எப்படி யூரியா

எப்படி யூரியா

அந்த யூரியாவை வைத்துதான் நான் என் தோட்டத்தில் அதிக மகசூல் பெற்றேன். அதேபோல் கீழ் விழும் தலைமுடியில் இருந்து உரம் தயாரிக்க முடியும். திருப்பதியில் இருந்து மொத்தமாக முடி வாங்கி நான் உரம் தயாரித்துள்ளேன். அதை என் தோட்டத்தில் பயன்படுத்தி இருக்கிறேன், என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.

English summary
We have to store urine and make urea in great effect, says Minister Nitin Gadkari in innovators meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X