மகாராஷ்டிராவின் ஸ்டார் தொகுதிகளில் கோலோச்சியது யார்? வெற்றி, தோல்வி முழு விவரம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அரசியல் ரீதியாக தேசிய அளவில் முதன்மை மாநிலமாக இருக்கிறது. எனவே, இங்கு யார் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், ஸ்டார் தொகுதிகளில் யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள்என்கிற விவரம் வெளியாகியுள்ளது.
இம்மாநிலத்தை பொறுத்தவரை இரண்டு கூட்டணிகள் உள்ளன. ஒன்று 'மகாயுதி'. இந்த கூட்டணிக்கு பாஜக தலைமை வகிக்கிறது. உடன் ஷிண்டே சிவசேனாவும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளன. இந்த கூட்டணிதான் தற்போது ஆளும் கட்சியாக உள்ளது. ஷிண்டேவும், அஜித் பவாரும் ஒரு காலத்தில் ஒன்றுபட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸின் அங்கமாக இருந்தன. ஆனால் இடையில் பிரிந்துவிட்டனர்.

மறுபுறம் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி இருக்கிறது. இதில் காங்கிரஸ் தலைமையாகவும், உத்தவ் சிவசேனா, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் இருக்கின்றன.
போட்டியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 149, ஷிண்டே சிவசேனா 81, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 தொகுகளிலும் களம் இறங்கியுள்ளன. அதேபோல காங்கிரஸ் 101, உத்தவ் சிவசேனா 95 மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 86 தொகுதிகளில் களம் கண்டுள்ளன.
288 தொகுதிகள் கொண்ட இம்மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற 145 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் பாஜக வெற்றிப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மாநிலத்தின் ஸ்டார் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
கோப்ரி-பச்பகாடி: இந்த தொகுதியில் மாநிலத்தின் முதல்வரும், ஷிண்டே சிவசேனாவின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே போட்டியிடுகிறார். கடந்த 2009ம் ஆண்டிலிருந்து ஷிண்டே இந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அனைத்து தேர்தலிலும் இவர் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். கடந்த தேர்தலில் இவர் 1.13 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார். தேர்தலில் அவர் பெற்ற அதிகப்பட்ச வாக்குகள் இதுதான். இந்த முறை அவருக்கு எதிராக உத்தவ் அணியின் கேதர் திகே என்பவர் போட்டியிடுகிறார். இத்தேர்தலில் ஷிண்டே 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
நாகபுரி தென்மேற்கு: இரண்டாவது முக்கியமான தொகுதி இதுதான். இங்கும் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 3 தேர்தல்களில் தேவேந்திர பட்னாவிஸ் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். ஆனால் கடந்த தேர்தலில் இவரது வாக்கு வங்கி 2.35% அளவுக்கு குறைந்திருந்தது. இதை சரிக்கட்டி இந்த தேர்தலில் அவர் ஜெயிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு பாஜக மத்தியில் எழுந்திருக்கிறது. இவரை எதிர்த்து பிரபுல்லா குடே போட்டியிடுகிறார். மாலை 6.30 மணியளவில் இறுதி முடிவு வந்துள்ளது. இதன்படி பட்னாவிஸ் வெற்றி பெற்றிருக்கிறார்.
பாராமதி: ஸ்டார் தொகுதி வரிசையில் இந்த தொகுதி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த தொகுதியின் ஹீரோ காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும்தான். கடந்த 1999ம் ஆண்டிலிருந்து அஜித் பவார்தான் இந்த தொகுதியில் ஜெயித்து வருகிறார். ஆனால் அவர் ஜெயித்தபோதெல்லாம் தேசியவாத காங்கிரஸ் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போது இரண்டு அணியாக உடைந்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி அஜித் பவார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
சகோலி: இந்த தொகுதியில் காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு இரண்டு தேர்தலுக்கும் பாஜகவையும், காங்கிரஸையும் மக்கள் மாறி மாறி தேர்ந்தெடுக்கின்றனர். அந்த வகையில் கடந்த ஒரு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, இரண்டாவது முறையும் காங்கிரஸ் வெற்றி பெறும் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இங்கு மகாராஷ்டிரா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் நானா பட்டேல் களம் இறங்கியுள்ளார். தேர்தல் முடிவுகளின்படி நானா பட்டேலை 658 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் அவினாஷ் தோற்கடித்துள்ளார்.
வொர்லி: ஸ்டார் தொகுதியில் கடைசியல் இடத்தில் இந்த தொகுதி இருக்கிறது. இங்கு சிவசேனாவின் ஆதிக்கம்தான் இருந்து வருகிறது. இந்த முறை உத்தவ் சிவசேனாவின் தலைவர் உத்த தாக்ரேயின் மகனும், முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்ரே களமிறங்கியுள்ளார். இவரை எதிர்த்து ஷிண்டே சிவசேனாவின் இளம் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான மிலிந்த் முரளி களமிறக்கப்பட்டிருக்கிறார். ஆயினும் தேர்தல் முடிவுகளின்படி ஆதித்யா 8801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications