வெள்ளை குர்தாவில் ரத்த காயத்துடன் ஆட்டோவில் ஏறிய சைஃப் அலிகான் முதலில் கேட்டது என்ன? டிரைவர் தகவல்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதை அடுத்து அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது சைஃப் முதலில் என்ன கேட்டார் என்பது குறித்து ஆட்டோ ஓட்டுநர் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சைஃப் அலி கானின் மும்பை பாந்த்ரா வீட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து ஒருவர் கொள்ளை அடிக்க முயற்சித்ததுடன், அதை தடுத்த சைஃப் அலியை 6 முறை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தம் 12 மாடிகள் கொண்ட அந்த குடியிருப்பில் சைஃப்புக்கு 4 மாடிகள் சொந்தமானது என தெரிகிறது. அந்த வீட்டில் பாதுகாவலர்கள், சிசிடிவி கேமராக்களை தாண்டி ஒருவர் கடந்த 16 ஆம் தேதி நடிகர் சைஃப் அலிகான் வீட்டிற்கு அதிகாலை 2.30 மணிக்கு வந்துள்ளார்.
ஏதோ சப்தம் கேட்டதை அடுத்து அவரது அலறலை கேட்டு சைஃப் அலிகான் வந்து அந்த மர்ம நபரை தடுக்க முயன்ற போது அவர் சைஃப்பையும் பணியாளரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார். இதில் சைஃப்பிற்கு 6 முறை அந்த நபர் கத்தியால் குத்தியுள்ளார்.
அதிலும் முதுகுதண்டில் காயமேற்பட்டுள்ளது. ரத்தம் கொட்டியதை அடுத்து சைஃப் அலிகானை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது அவருடைய கார் தயாராகவில்லை. இதனால் அவருடைய மகன் இப்ராஹிம் அலி கான் ஆட்டோவில் தனது தந்தையை அழைத்துக் கொண்டு லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை போலீஸார் கைது செய்தனர். சைஃப்பை கத்தியால் குத்திவிட்டு தனது உடையையும் அந்த மர்ம நபர் மாற்றிவிட்டுச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
6 ஆவது மாடியில் இருந்த கேமராவில் அந்த நபரின் முகம் தெளிவாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கும் சைஃப் அலிகான் வீட்டு பணியாளருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
எந்த கேமராவிலும் அந்த நபர் சிக்காமல் சைஃப் அலிகான் வீட்டிற்கு செல்ல அவரது வீட்டு பணியாளர்கள் யாராவது உதவியிருக்க வேண்டும் என போலீஸார் தெரிவிக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட சைஃப் அலிகான் உயிர் பிழைத்தது, காருக்காக காத்திருக்காமல் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்ததே முக்கிய காரணம் என்கிறார்கள்.
அந்த வகையில் சைஃப் அலிகானை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர், சில உருக்கமான தகவல்களை ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நான் சைஃப் அலிகான் வீட்டு வழியாக சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்து வந்த ஒரு பெண் ஆட்டோவை நிறுத்தும் படி கூறினார்.
நானோ வேறு ஏதோ பிரச்சினை என நினைத்தேன். அப்போதுதான் சைஃப் அலிகானை வீட்டிற்குள் இருந்து ரத்தக் காயங்களுடன் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அவருடன் ஒரு குழந்தையும் இருந்தது. சைஃப் அலிகான் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததுமே "மருத்துவமனைக்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்" என கேட்டார்.
நான் 10 நிமிடங்களுக்குள் சென்றுவிடலாம் என கூறி அந்த நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டோம். அவரது கழுத்து, முதுகு பகுதிகளில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவர் அணிந்திருந்த வெள்ளை குர்தாவே சிவப்பு நிறத்தில் இருந்தது. பின்னர் அவர்களை மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு எந்த கட்டணத்தையும் வாங்காமல் வந்துவிட்டேன். இவ்வாறு அந்த ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்தார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications