ஆறு நாள் சிகிச்சைக்கு ரூ.26 லட்சம்! சைஃப் அலி கான் மருத்துவ செலவு! இன்சூரன்ஸ் நிறுவனம் செய்த காரியம்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கடந்த வாரம் அடையாளம் தெரியாத மர்ம நபர் கத்தியால் குத்தினார். இதற்கு அவர் ஒரு வாரம் சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த வாரம் தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே ஆறு நாள் சிகிச்சைக்கு சைஃப் அலி கானுக்கு மருத்துவ கட்டணம் எவ்வளவு என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
சைஃப் அலி கான் வீட்டில் கடந்த ஜனவரி 16ம் தேதி கொள்ளை முயற்சி நடந்த நிலையில், அதைத் தடுக்க முயன்றபோது சைஃப் அலி கானை அந்த நபர் சரமாரியாகக் கத்தியால் குத்தினார்.

இதில் சைஃப் அலி கான் படுகாயமடைந்த நிலையில், அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆறு நாட்கள் சிகிச்சை பெற்ற அவருக்கு 2 ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜனவரி 22ம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சைஃப் அலி கான்:
இதற்கிடையே சைஃப் அலி கானின் மருத்துவச் செலவு கட்டணம் குறித்த தகவலும் அதற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செலவழித்த தொகை குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளம்பியுள்ளது. சைஃப் அலி கானின் மருத்துவச் செலவுகள் குறித்து நெட்டிசன்கள் அதிருப்தி தெரிவித்து, தங்களுக்கு இன்சூரன்ஸின் போது ஏற்பட்ட சிக்கல் குறித்தும் விவரித்து வருகிறார்கள்.
லீக்கான இந்த ஆவணங்களின்படி சைஃப் அலி கான் தரப்பு மருத்துவச் செலவுகளுக்கு ரூ.35.95 லட்சம் செலவாகும் எனக் கோரி கிளைம் தாக்கல் செய்துள்ளனர். சைஃப் அலி கான் நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீட்டை எடுத்திருந்த நிலையில், அந்த நிறுவனம் முதற்கட்டமாக ரூ.25 லட்சத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த லீக் ஆன ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது..
பில் எவ்வளவு:
சைஃப் அலி கான் ஆறு நாட்கள் மருத்துவமனையில் இருந்த சூழலில் கடந்த ஜனவரி 21ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்த பிறகு, அவரது இறுதி பில் கட்டணம் கணக்கிடப்பட்ட நிலையில், அது ரூ.26 லட்சமாக இருந்துள்ளது. மீத தொகையும் இன்சூரன்ஸ் நிறுவனம் விரைவில் விடுவிக்கும் என்றே தெரிகிறது. இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. அனைத்துமே லீக் ஆன தகவல்கள் தான்.
ஆனால், இதுவே இணையத்தில் பேசுபொருளாக உள்ளது. சராசரி மக்கள் பிரீமியம் முறையாகக் கட்டி வந்தாலும் மருத்துவச் செலவுகளுக்கு இன்ஸ்சூன்ஸ் கிளைம் செய்தால் 1008 கேள்விகளைக் கேட்பார்கள். இதனால் அவசர சிகிச்சைகளின் போது, நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால், பிரபலம் என்ற ஒரே காரணத்திற்காக எந்தவொரு கேள்விகும் கேட்காமல் ரூ.25 லட்சத்தைக் காப்பீட்டு நிறுவனம் ஒதுக்கி உள்ளதாகப் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
புலம்பும் நெட்டிசன்கள்:
இது தொடர்பாக நெட்டிசன்கள் கூறுகையில், "சாதாரண மருத்துவமனைகளில் சாமானியர்களுக்கு இதுபோன்ற சிகிச்சைக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் ஒப்புதல் தர மாட்டார்கள். ஆனால், இதுபோன்ற நட்சத்திர மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. எந்தவொரு கேள்வியும் கேட்காமல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அந்த தொகையை செட்டில் செய்கிறது. இதனால் அனைவருக்கும் பிரீமியங்கள் அதிகரித்து வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் தான் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.
இது குறித்து மருத்துவர் பிரசாந்த் மிஸ்ரா கூறுகையில், "உண்மையில் ஒரு சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் கணக்கிலேயே எடுத்துக் கொள்வதில்லை.. சில மருத்துவமனைகளுக்கு அதிக கட்டணங்களைக் காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கின்றன. இதனால் கடைசியில் எல்லா பாலிசிதாரர்களுக்கும் பிரீமியம் தொகை அதிகரிக்கவே செய்கிறது" என்றார்.
இன்சூரன்ஸ் சொல்வது என்ன:
இருப்பினும் இன்சூரன்ஸ் நிறுவனம் இது தொடர்பாக வேறு விதமாக பதிலளிக்கிறார்கள். இது தொடர்பாக நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "நோயின் தீவிரத்தன்மை, நோயாளியின் நிலைமை, என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது, எந்த மருத்துவனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார் எனப் பல விஷயங்களைப் பொறுத்தே பில் மாறுபடும். ஒரே மருத்துவமனை என்றாலும் கூட அவர் எடுக்கும் ரூமை பொறுத்து பில் மாறுபடும்.
கஸ்டமர் என்ன மாதிரியான ஹெல்த் இன்சூரன்ஸை எடுத்துள்ளார் என்பதை பொறுத்து எங்களால் தொகையை க்ளியர் செய்ய முடியும். எந்த சிகிச்சைக்கு எவ்வளவு தொகையை ஒதுக்க வேண்டும் என்பது குறித்து எங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் ஒப்பந்தம் உள்ளது. அதை நாங்கள் அவ்வப்போது விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாற்றி அமைத்தே வருகிறோம்" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications