பிரதமர் டிகிரி விவகாரம்.. சப்போர்ட்டிற்கு வரும் சரத் பவார்! உற்று பார்க்கும் எதிர்க்கட்சிகள்! அடடே
மும்பை: சமீபத்தில் பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழ் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மோடியை வீழ்த்த பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் சேர வேண்டும் என்பதையே பல்வேறு மூத்த எதிர்க்கட்சி தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சில விஷயங்களில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் வந்தாலும் கூட பெரும்பாலான விஷயங்களில் எதிர்க்கட்சிகள் முரண்பட்டே இருக்கிறது. முன்னதாக பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழ் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கைக் குஜராத் உயர்நீதிமன்றம் ரூ. 25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்தது.

உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் கல்லூரிப் பட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரதமர் மோடி படித்த கல்லூரி என்று எந்த கல்லூரி தான் சொல்ல விரும்பாது.. ஆனால் இதில் ஏன் யாரும் முன்வரவில்லை என்று தாக்கரே சாடியுள்ளார்.
இருப்பினும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இதில் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களிடம் இருந்து மாறுபட்ட நிலைப்பாட்டையே எடுத்துள்ளார். நாட்டில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் பல உள்ள நிலையில், தலைவர்களின் கல்வித் தகுதி குறித்து பிரச்சினை எழுப்பி சிலர் நேரத்தை வீணடிப்பதாக சரத் பவார் விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு மற்றும் பணவீக்கம் போன்ற விஷயங்களில் தான் நமக்குக் கவனம் தேவை.. தலைவர்களின் தனிப்பட்ட விவகாரங்கள் உள்ளிட்டவற்றில் சென்று நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.
இன்று காலேஜ் டிகிரி குறித்த கேள்வி அடிக்கடி எழுகிறது. ஒவ்வொருவரும் என்ன படித்திருந்தால் என்ன? இதெல்லாம் ஒரு அரசியல் பிரச்சினையா? மத்திய அரசை விமர்சிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு, பணவீக்கம் என பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது.

மதம் மற்றும் ஜாதியின் பெயரால் மக்களிடையே வேறுபாடுகள் உருவாக்கப்படுகிறது. முறை தவறிப் பெய்யும் பருவமழையால் பயிர்கள் நாசமாகிறது. இது தவிர வேறு பல முக்கியமான விஷயங்களும் இருக்கிறது. இவை குறித்து விவாதங்கள் தான் நமக்குத் தேவை" என்று அவர் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.
சரத் பவார் எதிர்க்கட்சிகளிடம் இருந்து மாறுபட்ட அதேநேரம் ஆளும் தரப்பிற்கு ஆதரவாகக் கருத்துச் சொல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக அதானி குழுமத்தை ஆதரித்து, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் குழும அறிக்கையையும் அவர் சாடியிருந்தார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையைக் கோரி வரும் நிலையில், சரத் பவார் அதானிக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். இது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், சரத் பவார் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்னும் ஒற்றுமையாகவே இருப்பதாகவும் காங்கிரஸ் சார்பில் விளக்கமளித்தது.
பிரதமரின் டிகிரி விவகாரத்தை ஆம் ஆத்மி தான் முன்னெடுத்தது. அவர்கள் இதற்காக "பட்டத்தைக் காட்டுங்கள்" (Show Your Degree) என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. இந்தச் சூழலில், இதிலும் சரத் பவார் எதிர்க்கட்சிகளிடம் இருந்து மாறுபட்ட ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications