Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்திரா காந்திக்கும் இப்படி தான்.." தாக்ரே கையைவிட்டு போன சிவசேனா.. சரத் பவார் கொடுக்கும் ஐடியா

ஷிண்டே அணியை தேர்தல் ஆணையம் சிவசேனாவாக அங்கிகரித்துள்ள நிலையில், சரத் பவார் இது குறித்து முக்கிய கருத்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஷிண்டே அணியை சிவசேனாவாக அங்கிகரித்த தேர்தல் ஆணையம், சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் அவர்களுக்கு ஒதுக்கியது. இது தாக்கரே தரப்பிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மூத்த அரசியல்வாதியும் என்சிபி தலைவருமான சரத் பவார் முக்கிய அட்வைஸ் வழங்கியுள்ளார்.

அப்போது பாஜக மற்றும் சிவசேனா இடையே இருந்த கூட்டணி திடீரன முறிந்தது. இதையடுத்து, பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகி.. காங்கிரஸ், என்சிபி கட்சிகளுடன் கூட்டணி அரசை அமைத்தது.

அப்போது பாஜக மற்றும் சிவசேனா இடையே இருந்த கூட்டணி திடீரன முறிந்தது. இதையடுத்து, பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகி.. காங்கிரஸ், என்சிபி கட்சிகளுடன் கூட்டணி அரசை அமைத்து.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

இந்தக் கூட்டணி அரசில் முதல்வராக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே இருந்தார். 2.5 ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி, எந்தவொரு பிரச்சினையும் இல்லாமலே சென்று கொண்டிருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு திடீரென கூட்டணியில் திடீரென குழப்பம் ஏற்பட்டது. சிவசேனாவில் ஷிண்டே தலைமையில் 40 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதன் காரணமாக தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. பாஜகவுடன் கைகோர்த்த ஏக்நாத் ஷிண்டே அணி புதிய கூட்டணி அரசை அமைத்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.

 சிவசேனா

சிவசேனா

இருப்பினும், யார் ரியல் சிவசேனா என்பதில் குழப்பம் தொடர்ந்தது. இரு தரப்பும் சிவசேனா கட்சி மற்றும் அதன் வில் அம்பு சின்னத்திற்கு உரிமை கோரியது. ஒரே சின்னத்திற்கு இரு கட்சிகள் உரிமை கோரிய நிலையில், சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. கடந்த ஆண்டு அங்கு நடந்த அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலுக்கு தாக்கரே தரப்பிற்கு 'சிவசேனா உத்தவ் பாலசாஹேப் தாக்கரே' என்ற பெயரும் 'தீபச்சுடர்' சின்னமும் ஒதுக்கப்பட்டது. அதேபோல ஏக்நாத் ஷிண்டே அணிக்கு 'பாலசாஹேபாஞ்சீ சிவசேனா' என்ற பெயரும் வாள் கேடயம் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

 ஷிண்டே தரப்பு

ஷிண்டே தரப்பு

இரு தரப்புமே வில் அம்பு சின்னத்திற்கு உரிமை கோரி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நேற்று தான் உத்தரவிட்டது. அதாவது ஷிண்டே அணியை சிவசேனாவாக அங்கிகரித்த தேர்தல் ஆணையம், சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் அவர்களுக்கு ஒதுக்கியது. இது தாக்கரே தரப்பிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தாக்கரே தரப்பு அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஆலோசித்து வரும் நிலையில், மூத்த அரசியல்வாதியும் என்சிபி தலைவருமான சரத் பவார் முக்கிய அட்வைஸ் வழங்கியுள்ளார்.

 சரத் பவார்

சரத் பவார்

"வில் மற்றும் அம்பு" சின்னத்தை இழந்தது தாக்கரே தரப்பிற்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிட்ட சரத் பவார், புதிய சின்னத்தை நிச்சயம் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "இது தேர்தல் ஆணையத்தின் முடிவு. தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட பிறகு, இது குறித்து பேசுவது வேஸ்ட்.. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று புதிய சின்னத்தை தேர்வு செய்யுங்கள்.. பழைய சின்னம் இழந்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.. மக்கள் நிச்சயம் புதிய சின்னத்தை ஏற்றுக் கொள்வார்கள்..

 இந்திரா காந்திக்கு

இந்திரா காந்திக்கு

அடுத்த 15-30 நாட்களுக்கு வேண்டுமென்றால் இது விவாதத்தில் இருக்கும்.. ஆனால், அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது. புதிய சின்னத்தை தான் தேர்வு செய்ய வேண்டும். இந்திரா காந்தியும் இதேபோன்ற ஒரு சூழலை எதிர்கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது "இரண்டு காளைகள்' தான் காங்கிரஸ் சின்னமாக இருந்தது. இருப்பினும், சின்னம் முடங்கிய போது, 'கை' சின்னம் காங்கிரசுக்கு கிடைத்தது. இந்த புதிய சின்னத்தையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதேபோல தான், தாக்கரேவின் புதிய சின்னத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

 ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

பெருநகர மும்பை மாநகராட்சி தேர்தல், கடந்தாண்டே நடக்க இருந்தது. இருப்பினும், பல காரணங்களால் இன்னும் நடக்கவில்லை. சில மாநிலங்கங்களின் பட்ஜெட்டை காட்டிலும் மும்பை பெருநகரின் பட்ஜெட் அதிகம். அந்தளவுக்கு முக்கியமான ஒன்று பெருநகர மும்பை மாநகராட்சி தேர்தல்.. கடந்த முறை நடந்த தேர்தலில் சிவசேனா- பாஜக இணைந்தே எதிர்கொண்டது. இப்போது ஷிண்டே அணிக்கே சின்னம் மற்றும் கட்சி செல்லும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இது மும்பை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+