Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பானி பொண்ணுன்னா சும்மாவா? அந்த பங்களா ரூ.500 கோடி.. 24 பாத்ரூம் இருக்காமே.. வாயை பிளந்த அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

மும்பை: அம்பானி குடும்பத்தில் எந்த சம்பவம் நடந்தாலும், அது உலக ஃபேமஸ் ஆகிவிடுகிறது.. அப்படித்தான் இப்போதும் ஒரு சமாச்சாரம் நடந்து, பலரது வாயை பிளக்க வைத்து வருகிறது.

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி.. இவர் ரிலையின்ஸின் சில்லறை விற்பனை வணிகத்தை நிர்வகித்து வருகிறார்.. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸால் உருவாக்கப்பட்ட ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (Reliance Retail Ventures Limited - RRVL) நிறுவனத்துக்கு, இஷா அம்பானியைதான்,சிஇஓவாக, முகேஷ் அம்பானி கடந்த 2002ல் நியமித்தார்..

Where is Ambani Daughter Isha Ambanis House and hollywood celebrity couple bought ishas house for rs500 crore


திருமணம்:
இப்போது இஷாவுக்கு 32 வயதாகிறது.. கடந்த 2018ல் இவருக்கு திருமணம் நடந்து தற்போது, கிருஷ்ணா, ஆதியா என்ற இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர்.

இஷா அம்பானி கடந்த வருடம் முக்கிய பொறுப்பை பெற்ற பிறகு, அதன் மூலம் மட்டுமே, நல்ல வருவாய் அவருக்கு கிடைத்து வருகிறது.. அதாவது, ஒரு மாதத்திற்கு ஈவுத்தொகை லாபத்தை சேர்க்காமல் வெறும் வருவாய் மட்டும் ரூ. 35 லட்சம் என்கிறார்கள்.. அப்படியானால், ஈவுத்தொகை லாபத்தை சேர்க்காமல் ஆண்டு வருமானம் மட்டும் ரூ.4.2 கோடியாம்.

வணிகம்:
சிஇஓ-ஆக இருக்கும் ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் மதிப்பு மட்டும் 8 ஆயிரத்து 361 லட்சம் கோடி ரூபாயாகும். இந்தியாவின் முதல் 4 நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்று என்பது மிக முக்கியமான விஷயமாகும்.

இந்நிலையில், இஷா அம்பானியின் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டை, ஒரு ஹாலிவுட் நடிகர் விலைக்கு வாங்கியிருக்கிறாராம். அதாவது, கர்ப்பமாக இருந்தபோது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில்தான் இஷா அம்பானி நிறைய ஓய்வில் இருந்தாராம்.. கர்ப்பிணி மகளை, அந்த நேரத்தில் அருகிலிருந்து கவனித்து கொண்டது அவரது தாய் நீதா அம்பானிதான். அந்த இரட்டை குழந்தைகள் பிறந்ததும் இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில்தான்.

Where is Ambani Daughter Isha Ambanis House and hollywood celebrity couple bought ishas house for rs500 crore

ப்ளே ஸ்கூல்: இந்த 2 குழந்தைகளும் இப்போது நன்றாக வளர்ந்துவிட்டார்கள்.. பிளே ஸ்கூலுக்கு போக ஆரம்பித்துவிட்டார்கள்... அதுவும் முதல் நாள் இஷாவும், ஆனந்தும் ஒன்றாக சேர்ந்து வந்து, தங்கள் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பி வைத்தவீடியோ இணையத்தில் வைரலானது..

இப்போதும்கூட, பிள்ளைகளை தினமும் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு செல்கிறார் இஷா.. மறுபடியும் மாலை நேரங்களில் அவர்களை அழைத்து செல்ல பள்ளிக்கு வருகிறார். அப்படி வரும்போது, எத்தனையோ முறை, ஸ்கூலுக்கு வெளியே, மற்ற பெற்றோர்களுடன் காத்திருக்கிறார். இந்த போட்டோக்களும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஸ்பெஷல் வீடு: இஷாவின் இந்த லாஸ்ஏஞ்சல்ஸ் வீட்டைதான், பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக்கும், அவரது காதலி நடிகை ஜெனிஃபர் லோபஸும் சேர்ந்து ரூ. 500 கோடிக்கு வாங்கி இருக்கிறார்களாம்.. 500 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கும் இந்த வீட்டில் அப்படியென்ன ஸ்பெஷலாட்டி உள்ளது தெரியுமா?

இந்த பங்களா மொத்தம் 38 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது.. மொத்தம் 12 படுக்கையறைகள், 24 பாத்ரூம்கள், ஜிம், ஸ்பா, பேட்மிண்டன் கோர்ட் இப்படி ஏகப்பட்ட வசதிகள் உள்ளதாம்.. இந்த செய்திதான், தற்போது இந்தியா மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+