17 குழந்தைகள் கடத்தல்.. என்கவுண்டரில் கொல்லப்பட்ட முக்கிய புள்ளி! யார் இந்த ரோஹித் ஆர்யா ?
மும்பை: மும்பையில் 17 குழந்தைகளை கடத்தி அடைத்து வைத்திருந்ததாக வந்த தகவலையடுத்து, அவர்களை மீட்க போலீசார் முயன்றனர். இந்த முயற்சியின்போது, போலீசாரை தாக்க முயன்றதாக கடத்தல்காரர் ரோஹித் ஆர்யா சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். யார் இந்த ரோஹித் ஆர்யா? என்பது குறித்த முக்கிய தகவல்களை மகாராஷ்டிரா போலீசார் வெளியிட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரோஹித் ஆர்யா, கடத்தல்காரர் என்று தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. ரோஹித் ஆர்யா ஸ்வச்சா மானிட்டர் என்ற திட்டத்தை நடத்தி வந்தவர். அதாவது மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட 15 நாட்களுக்கு தீவிரத் தூய்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், அவ்வப்போது அறிக்கைகளைத் தயாரிக்கவும் தன்னார்வ நிறுவனங்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். அப்படியான நிறுவனத்தை நடத்தி வந்தவர்தான் ஆர்யா.

இந்த பணிக்காக அரசு நிதியை கொடுக்க வேண்டும். ஆர்யாவுக்கு ரூ.2 கோடி வரை நிதி நிலுவையில் இருந்திருக்கிறது. எனவே இந்த நிதியை பெற குழந்தைகளை கடத்தியிருக்கிறார்.
ரோஹித் ஆர்யா, கடந்த 2023ல் மகாராஷ்டிராவில் 'ஸ்வச்சதா மானிட்டர்' திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்திற்கான பணம் தனக்கு வழங்கப்படவில்லை என்றும், இதற்கான அங்கீகாரம் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதை கண்டித்து இதற்கு முன்பும் அவர் போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்களில் ஈடுபட்டுள்ளார். சமீபத்திய தகவலின்படி, மும்பை, புனே மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் அவருக்கு தொடர்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆர்யா முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் சிவசேனா தலைவர் தீபக் கேசர்கருடன் பேச விரும்பியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் கேசர்கர் கூறுகையில், "ரோஹித் ஆர்யா ஸ்வச்சா மானிட்டர் என்ற திட்டத்தை நடத்தி வந்தார். அவர் அரசாங்கத்தின் பிரச்சாரத்தில் பங்கேற்றார். அதில், சில குழந்தைகளிடமிருந்து அவர் நேரடியாக கட்டணம் வசூலித்தார் என்று துறை கூறியது. ஆனால் ரோஹித் ஆர்யா அப்படி எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை என்று கூறினார். அவர் துறையுடன் பேசி இந்த பிரச்சினையை தீர்த்திருக்க வேண்டும். குழந்தைகளை இப்படி பிணைக் கைதிகளாக பிடிப்பது தவறு" என்று கூறியிருக்கிறார்.
அமைச்சர் ஆர்யாவுக்கு ஒரு நல்லெண்ணத்தில் உதவினார். "நான் கல்வி அமைச்சராக இருந்தபோது தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு உதவினேன். நான் அவர்களுக்கான பணத்தை காசோலை மூலம் வழங்கினேன். ஆனால் அரசாங்கத்தின் பணம் பெறுவதற்கு அனைத்து நடைமுறைகளையும் முடிக்க வேண்டும். எனவே, அவர்களின் 2 கோடி ரூபாய் கோரிக்கை சரியானது என்று நான் நினைக்கவில்லை. மக்களை கடத்துவது குறைகளை தெரிவிப்பதற்கான சரியான வழி அல்ல" என்று அவர் அமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால் இது ஆளும் கட்சியின் தவறால் நேர்ந்த சம்பவம் என்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். அதாவது, "ரோஹித் ஆர்யா பள்ளிக் கல்வித் துறைக்கான திட்டங்களை முடித்த பின்னரும், 2 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கம் கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மறுபுறம், ஒப்பந்தக்காரர்களின் பில்கள் தாமதமாவதால் ஒப்பந்தக்காரர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்கிறார்கள். மும்பையில், இந்த ரோஹித் ஆர்யா 17 குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்துள்ளார்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
"அரசாங்கம் எத்தனை பில்களை தாமதப்படுத்தியுள்ளது? இத்தகைய பெரிய சம்பவங்கள் எத்தனை வரக்கூடும்? அரசாங்கத்தின் பொறுப்பற்ற நிதி மேலாண்மை காரணமாக இன்று அப்பாவி குழந்தைகளின் உயிர்கள் பறிக்கப்பட்டிருந்தால், யாருடைய பொறுப்பு அது? கல்வி அமைச்சர் கேசர்கர் பொறுப்பேற்பாரா அல்லது அரசாங்கம் பொறுப்பேற்குமா?" என்று காங்கிரஸ் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications