மாமனாரை "காலி" செய்த மருமகள்.. பெண் அதிகாரி செய்ற காரியமா இது? ரூ.300 கோடிக்கு சொத்து வேற.. அசிங்கம்
மும்பை: நாக்பூரில் யார் இந்த பெண் அதிகாரி அர்ச்சனா? என்ற அதிர்ச்சி கேள்வி அம்மக்களிடம் எழுந்துள்ளது.. இந்த பெண் அதிகாரியிடம் விசாரணையும் துரிதமாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் புருஷோத்தம் புத்தேவ்.. இவருக்கு 82 வயதாகிறது.. இவர் கடந்த மே 22-ம் தேதி, கார் ஒன்று நேருக்கு நேர் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, போலீசார் கார் விபத்து ஏற்படுத்திய, டிரைவரை கைது செய்தனர்.. ஆனால், அந்த டிரைவரோ, உடனே ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.

இதற்கு நடுவில், கார் விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆராய்ந்தனர்.. புருஷோத்தை வேண்டுமென்றே கார் ஏற்றி கொன்றிருக்கிறார்கள் என்பது அப்போதுதான் தெரியவந்தது.
யார் காரணம்: இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணம் என்று விசாரணையை துரிதப்படுத்தினார்கள்.. அப்போதுதான் புருஷோத்தின் மருமகள் அர்ச்சனாவின் பெயர் இதில் அடிபட்டது.
புருஷோத்துக்கு 300 கோடி ரூபாய்க்கு சொத்து இருக்கிறதாம்.. இந்த சொத்தை அபகரிப்பதற்காகவே, மருமகள் அர்ச்சனா இப்படியொரு கொலையை செய்திருப்பதும் போலீசுக்கு தெரியவந்தது. இதற்காக கூலிப்படையை நாடியிருக்கிறார் அர்ச்சனா.. மாமனாரை கொலை செய்வதற்கு, அந்த கூலிப்படைக்கு 1 கோடி ரூபாய் தந்தாராம்.. கூட்டாளிகளாக சர்தக் பாக்டே, தர்மிக் என்ற 2 கூலிப்படை நபர்களுக்கு தனித்தனியாக பணத்தையும், தங்க நகைநகைகளையும் தந்துள்ளார் அர்ச்சனா..
மாமனார்: இதையடுத்து புருஷோத்தம் மீது கார் மோதி கொன்று விட்டு விபத்து போல நாடகமாடியதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது. இப்போது அர்ச்சனா உட்பட 3 பேருமே கைதாகி உள்ளார்கள்.
நாக்பூரை சேர்ந்தவர் அர்ச்சனா.. 52 வயதாகிறது.. இவர் நகர திட்டமிடுதல் துறையில் அரசு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.. அர்ச்சனாவின் கணவர் மணிஷ் பிரபல டாக்டராக இருக்கிறார்.
ரூ.300 கோடி ரூபாய் சொத்தில், தங்களது பங்கை பிரித்துக்கொடுக்கும்படி பலமுறை மாமனார் புருஷோத்தமிடம் அர்ச்சனா கேட்டு வந்தாராம்.. ஆனாலும் குடும்ப சொத்தை மாமனார் பிரித்து தரவில்லை என்பதால், அர்ச்சனா கடும் கோபத்தில் இருந்திருக்கிறார்..
சொத்து பிரச்சனை: அதுமட்டுமல்ல, புருஷோத்திற்கு யோகிதா என்ற மகளும் இருக்கிறார்.. 300 கோடி ரூபாய் சொத்தை, தன்னுடைய மகளுக்கும் கொடுத்துவிடுவாரோ என்று அர்ச்சனாவிற்கு ஒருவித பயம் இருந்துகொண்டேயிருந்தது.. அதற்குபிறகுதான், மாமனாரை கொன்றால், மொத்த சொத்தையும் ஆட்டைய போட்டுவிடலாம் என்று அர்ச்சனா கணக்கு போட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இதனை கார் விபத்து மரணமாகவே போலீஸார் வழக்கு பதிவு செய்தார்கள்.. ஆனால், மாமனார் புருஷோத்தமனின் தம்பி, இதுகுறித்து சந்தேகத்தை கிளப்பினார்.. தன்னுடைய அண்ணனி மரணத்தில், மருமகள் அர்ச்சனாவுக்கு இதில் தொடர்பு இருக்க வாய்ப்பிருக்கலாம் என்று போலீசில் புகாரும் தந்தார். அதற்கு பிறகுதான் போலீசார் விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்திருக்கிறார்கள்.
டாக்டர் டிரைவர்: திட்டமிட்டே புருஷோத்தம் மீது கார் மோதியதும் அம்பலமாகியுள்ளது.. இதில் காரை ஓட்டி வந்து ஏற்றியது டாக்டர் மணிஷ் மகனின் டிரைவர் சர்தக் என்பது தெரிய வந்தது.. அந்த டிரைவரை பிடித்து விசாரித்தபோதுதான், அவரது நண்பர்கள் சச்சின் மற்றும் நீரஜ் ஆகியோருக்கு இக்கொலையில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
உடனே அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தபோதுதான், மருமகள் அர்ச்சனா பற்றிய அனைத்து உண்மையும் வெளிச்சத்துக்கு வந்தது. கார் விபத்து மரணம், கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. கொலை செய்வதற்கென்றே 2 கூலிப்படை நபர்களுககும் ரூ.2 லட்சம் கொடுத்து பழைய கார் ஒன்றை வாங்கி புருஷோத்தம் மீது ஏற்றிக்கொலை செய்யவேண்டும் என்றும், சம்பவம் விபத்து போன்று இருக்கவேண்டும் என்றும் கொலையாளிடம் அர்ச்சனா கண்டிஷன் போட்டாராம்.
பரபரப்பு: சம்பவத்தன்று புருஷோத்தம், ஆபரேஷன் செய்யப்பட்டு குணமடைந்து வரும் தன்னுடைய மனைவி சகுந்தலாவை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாராம்.. அப்போதுதான், வாடகை கார் ஏற்றி அவரை கொன்றுள்ளனர்.
300 கோடி ரூபாய் சொத்துக்காக மாமனாரை மருமகள் கொலை செய்ததும், இதற்காக 1 கோடி ரபாய் தந்ததும் நாக்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொலை சம்பவம், நடந்து 4 நாட்களுக்கு முன்பே மருமகள் சிக்கிவிட்டார்.. ஆனால், அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரித்திருக்கிறார்கள்.. அப்போது, அவரது பணியிலும் இதுபோன்ற முறைகேடுகள் இருப்பதாக புகார்கள் கசிந்து வருவது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications