27 அடுக்கு மாடி.. நிலநடுக்கம் வந்தாலும் அசராத முகேஷ் அம்பானியின் வீடு.. அன்டீலியா என்றால் என்ன?
மும்பை: இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது வீட்டிற்கு அன்டீலியா என ஏன் பெயர் வைத்துள்ளார் தெரியுமா?
இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் உலகிலேயே மிகப் பெரிய கட்டடத்தில் வசித்து வருகிறார். இந்த வீட்டில்தான் முகேஷ் தனது மனைவி, இரு மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.
தந்தை திருபாய் அம்பானி உயிருடன் இருந்தவரை வேறு ஒரு வீட்டில் முகேஷ் அம்பானி குடும்பமும் அனில் அம்பானி குடும்பமும் ஒன்றாக வசித்து வந்தது. தந்தை மறைவுக்கு பிறகு இருவரும் தனித்தனியே வசித்து வருகிறார்.

அப்போது தனது மனைவிக்காக முகேஷ் பார்த்து பார்த்து கட்டியதுதான் இந்த அன்டீலியா வீடு. 27 அடுக்குமாடிகளை கொண்டது இந்த வீடு. இவர்கள் 2011 ஆம் ஆண்டு இந்த வீட்டிற்கு வந்தனர். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு மட்டும் ரூ 25 ஆயிரம் கோடியாகும். விண்ணை முட்டும் அளவுக்கு மிகவும் உயரமான இந்த கட்டடம் 568 அடி அதாவது 173 மீட்டர் உயரம் கொண்டது.
இதன் மொத்த பரப்பளவு 4 லட்சம் சதுர அடியாகும். இங்கு 168 கார் ரிப்பேர் செய்யும் கடைகள் உள்ளன. வீட்டு விசேஷங்களை நடத்துவதற்கு ஒரு பெரிய ஹால் இருக்கிறது. 50 பேர் உட்கார்ந்து பார்க்கும் தியேட்டர், மாடி தோட்டங்கள், நீச்சல் குளம், ஸ்பா, மருத்துவமனை, கோயில் உள்ளிட்டவை இருக்கின்றன. அது போல் இங்கு பனி அறை உள்ளது. இந்த அறையில் சுவற்றில் இருந்து பனி உருகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 8 அளவு நிலநடுக்கம் வந்தாலும் இந்த கட்டடம் உறுதித்தன்மையுடன் இருக்கும். உலகின் மிகவும் விலை மதிப்புள்ள கட்டடமாக இது கருதப்படுகிறது. இங்கு 9 அதிவேக லிப்ட்கள் உள்ளன. மேலும் இந்த கட்டடத்தில் பணியாற்றுவோருக்கென தனி அறைகள் உள்ளன. இந்த கட்டடத்திற்கு அன்டீலியா என ஏன் பெயர் வைத்தார்கள் தெரியுமா.
15 ஆம் நூற்றாண்டில் பல உலக வரைபடங்களில் இருந்த ஒரு தீவின் பெயர்தான் அன்டீலியா. பின்னாளில் இப்படி ஒரு தீவு இருப்பதே மறுக்கப்பட்டது. மேலும் இது நிலம் அளவிடுவோரின் தவறு என்றும் கூறப்பட்டது. இந்த அன்டீலியா தீவானது Isle of Seven Cities என அழைக்கப்படுகிறது. சூரியன், தாமரை மலரை முன்மாதிரியாக வைத்து இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது.

அன்டீலியா என்பது ஒரு வகை தாவரத்தின் பெயர் என்கிறார்கள். ஆஸ்டெரேசி குடும்பத்தில் உள்ள பூக்கும் தாவரங்களின் ஒரு இனமாகும். தற்போது கியூபாவை பூர்வீகமாகக் கொண்ட அன்டீலியீ பிராச்சிசேட்டா என்ற ஒரு இனம் மட்டுமே உள்ளது. இதுதான் முகேஷ் அம்பானி தனது வீட்டிற்கு அன்டீலியா என பெயர் வைக்கக் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்த வீட்டில் இரு ஹெலிபேடுகள் உள்ளன. இந்த கட்டடத்தை வடிவமைத்தவர்கள் அமெரிக்க நாட்டு கட்டட் கலை நிபுணர்கள் ஆவர். இவர்கள் வடிவமைத்த நியூயார்க்கில் உள்ள மான்டரின் ஓரியண்டல் என்ற கட்டடத்தை பார்த்த நீடா அ்மபானி இம்பிரஸ் ஆனதால் இவர்களையே அன்டீலியாவை வடிவமைக்க நியமிக்கப்பட்டனர். 6 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடத்தில் 2010 ஆம் ஆண்டு கிரகபிரவேசம் நடந்துள்ளது.
ஆனால் அம்பானி உடனடியாக குடியேறவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு 50 பண்டிதர்களை வைத்து சிறப்பு யாகங்களை நடத்தி வாஸ்து பிரச்சினைகளை சரி பார்த்து அந்த ஆண்டு செப்டம்பரில்தான் குடிபெயர்ந்தனர். அன்றுமுதல் அந்த அன்டீலியாவில் இருந்து கொண்டுதான் மகன், மகள்களுக்கு திருமணத்தை நடத்தினார் முகேஷ் அம்பானி.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications