முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் காங். தோல்வி.. மகாராஷ்டிராவில் பாஜகவின் சக்கர வியூகமே இதுதான்!
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதிலும் இஸ்லாமியர்கள் மக்கள்தொகை கணிசமாக இருக்கும் தொகுதிகளிலும் கூட காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை. பாஜகவே அந்த தொகுதிகளையும் வென்றுள்ளன. இதற்கு என்ன காரணம்.. பின்னணியில் நடந்த அரசியல் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. அதில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி மட்டும் 234இல் வெற்றி பெற்றது.

குறிப்பாக 145 இடங்களில் போட்டியிட்ட பாஜக மட்டும் 132 இடங்களில் வென்றது. அதேபோல ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 41 இடங்களிலும் வென்றது. மறுபுறம் காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 50 இடங்களில் மட்டுமே வென்றது.
சிதறிய இஸ்லாமிய வாக்குகள்: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற அங்குள்ள இஸ்லாமிய வாக்குகள் சிதறியதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அங்கு மொத்தம் 38 தொகுதிகளில் முஸ்லீம்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளனர்.
அதாவது இந்த 38 தொகுதிகளில் முஸ்லீம் மக்கள் தொகை 20%க்கு மேல் இருக்கிறது. ஆனாலும், இந்த 38 இடங்களில் ஆளும் கூட்டணி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. காங்கிரஸ் கூட்டணி வெறும் 13 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. முஸ்லீம் வாக்குகளை மொத்தமாக தன்பக்கம் ஈர்ப்பதில் காங்கிரஸ் கட்சி தவறிவிட்டதையே இது காட்டுகிறது.
பாஜக தான் அதிகம்: கட்சி ரீதியாகப் பார்க்கும் போது முஸ்லீம் மக்கள் தொகை அதிகம் இருக்கும் இந்த 38 தொகுதிகளில் பாஜக மட்டும் 14 இடங்களில் வென்றுள்ளது. ஷிண்டே சிவசேனா 6 இடங்களில் வென்றுள்ள நிலையில், அஜித் பவாரின் என்சிபி 2 இடங்களில் வென்றுள்ளன.
அதேநேரம் எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றுள்ளன. தாக்கரே சிவசேனா 6 இடங்களில் வென்றுள்ள நிலையில். சரத் பவாரின் என்சிபி கட்சிக்கு முஸ்லீம் அதிகம் உள்ள தொகுதிகளில் 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மீதமுள்ள 3 இடங்களில் சமாஜ்வாதி கட்சிக்கு 2 இடங்களும், அசாதுதீன் ஒவைசியின் மஜ்லீஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளது.
என்ன காரணம்: கடந்த மே மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் முஸ்லீம் சமூகத்தின் ஆதரவுகள் தான் காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற உதவியது. ஆனால், சட்டசபைத் தேர்தலில் அதே முடிவுகள் எதிரொலிக்கவில்லை. மக்களிடையே பெரியளவில் ஆர்வம் இல்லாதது ஒரு காரணம். அதேநேரம் இஸ்லாமியர்களின் வாக்குகள் மிகப் பெரியளவில் பிரிந்ததே பாஜக வெற்றிக்கு உதவியிருக்கிறது.
உதாரணமாக, நாம் அவுரங்காபாத் கிழக்கு தொகுதியை எடுத்துக் கொள்வோம். அங்கு பாஜக வேட்பாளர் அதுல் சேவி வெறும் 2,161 வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்பியுமான இம்தியாஸ் ஜலீலை வீழ்த்தினார். அதேநேரம் அந்த தொகுதியில் விபிஏ சார்பில் போட்டியிட்ட அஃப்சர் கான் 6,507 வாக்குகளையும், சமாஜ்வாதி வேட்பாளர் அப்துல் கஃபர் சையத் 5,943 வாக்குகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
எதிராகத் திரும்பிவிட்டது: இந்த ஒரு தொகுதி என்று இல்லை. பெரும்பாலான தொகுதிகளில் இதே நிலை தான். இஸ்லாமிய வாக்குகள் பிரிந்ததே பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவியிருக்கிறது. லோக்சபா தேர்தல் கொடுத்த வெற்றியால்.. இஸ்லாமியர்கள் எப்படியும் தங்களுக்குத் தான் வாக்களிப்பார்கள் என்ற நினைப்பில் காங்கிரஸ் கூட்டணி இருந்துவிட்டது. அதுவே அவர்களுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications