Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"OLA".. ஆசை ஆசையாய் ஸ்கூட்டர் வாங்கி.. அதில் கழுதையை கட்டி.. நடுரோட்டில் இளைஞர் செய்த காரியம்..!

ஓலா ஸ்கூட்டரில் கழுதையை கட்டி இழுத்து வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆசை ஆசையாய் வாங்கிய ஸ்கூட்டர் நடுவழியில் நின்றுவிட்ட நிலையில், இளைஞர் செய்த காரியம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் கிட்டே... இவர், ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை புதிதாக வாங்கியிருக்கிறார். இந்த ஸ்கூட்டர் வாங்கிய ஆறே நாளில் திடீரென ரிப்பேர் ஆகிவிட்டது..

நடுரோட்டிலேயே அந்த ஸ்கூட்டரும் நின்றுவிட்டது.. அதனால், அதிர்ச்சியும் கடுப்பும் அடைந்த சச்சின், ஓலா கம்பெனிக்கு போனை போட்டு, புகார் சொன்னார்..

மெக்கானிக்

மெக்கானிக்

அந்த நிறுவனமும், ஒரு மெக்கானிக்கை அனுப்பி செக் செய்வதாக சொன்னார்கள்.. ஆனால், யாருமே வந்து ஸ்கூட்டரை ரிப்பேர் செய்யவில்லை... அதனால், தொடர்ச்சியாக கஸ்டமர் சர்வீஸுக்கு சச்சின் போனை போட்டுள்ளார்.. ஒருத்தரும் போன் எடுக்கவில்லை.. சச்சினுக்கு பதிலும் சொல்லவில்லை.. இதனால் வெறுப்பான சச்சின், தன்னுடைய புது ஸ்கூட்டரில் கழுதை ஒன்றை கட்டி விட்டு, ரோட்டில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார்...

 ஓலா கம்பெனி

ஓலா கம்பெனி

அதுமட்டுமல்ல, அந்த ஸ்கூட்டரில் "ஓலா ஒரு ப்ராடு கம்பெனி, ஓலா கம்பெனியின் வண்டிகள் எதையும் வாங்காதீங்க" என்று போர்டு வைத்து அதையும் பொதுமக்கள் பார்க்கும்படி ஸ்கூட்டரில் வைத்துவிட்டார்.. கழுதை, போர்டு, ஸ்கூட்டர் என ரோட்டில் வந்த சச்சினை பொதுமக்கள் வித்தியாசமாக பார்த்தனர்.. வீடியோவும் எடுத்து கொண்டனர்.. லெட்ஸ்அப் மராத்தி என்ற மீடியா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டதும், அது மேலும் வைரலாகிவிட்டது..

 சச்சின் ஆசை

சச்சின் ஆசை

இப்படி ஒரு ஓலா ஸ்கூட்டர் வாங்க வேண்டும் கடந்த வருடமே சச்சின் ஆசைப்பட்டாராம்.. கடந்த செப்டம்பரில் இந்த ஸ்கூட்டரை புக் செய்துள்ளார்.. ஆனால், இந்த வருடம் மார்ச் 24ம் தேதிதான் டெலிவரி ஆகி உள்ளது.. அவ்வளவு ஆசைப்பட்டும் வெறும் 6 நாளில் நடுரோட்டில் வண்டி நின்றுவிட்டதே என்ற ஆத்திரம் அதிகமாகிவிட்டதாம்.. ஓலா நிறுவனத்தின் இது போன்ற செயல்பாடுகள் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கையும் சச்சின் வைத்துள்ளார்...

Recommended Video

    அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்.. E Bikes அதிகம் வெடிக்க என்ன காரணம்?
     பைக்குகள்

    பைக்குகள்


    இது மட்டுமல்ல, சமீபகாலமாகவே, ஏராளமான எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி வருவதாக புகார்கள் வெடித்துள்ளன.. அதனால்தான், மார்க்கெட்டில் விற்பனையில் இருந்த 1,441 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் திரும்பப்பெறுவதாக அறிவித்தது... ஓலாவைப் போலவே ஜிதேந்திரா, ஓகினவா ஆகிய நிறுவனங்களும் தங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது நினைவிருக்கலாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+