Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷிண்டேவிற்கு கல்தா! பாஜகவில் இருந்துதான் முதல்வர்.. மகாராஷ்டிராவில் பரபர முடிவு? பட்நாவிஸ் ரிட்டர்ன்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பாஜகவின் மகாயுதி கூட்டணியில் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவில் இருந்துதான் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாயுதி கூட்டணியில், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர்போட்டியில் உள்ளனர். இதில் ஏக்நாத் ஷிண்டே தற்போது முதல்வராக உள்ளார். பாஜக கூட்டணி வென்றுள்ள நிலையில் ஷிண்டே முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார்.

election results 2024 maharashtra assembly election 2024 jharkhand assembly election 2024 by poll election 2024

அதே சமயம் இத்தனை ஆண்டுளாக பாஜக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தார். அவர் மீண்டும் முதல்வராகவே விரும்புவார். அவர் முதல்வர் ஆகும் பட்சத்தில் ஏக்நாத் ஷிண்டே கூட்டணியை முறிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட குழப்பமான சூழலில்தான் பாஜகவில் இருந்துதான் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் பாஜக தனிப்பட்ட வகையில் 120க்கும் அதிகமான இடங்களை வென்றுள்ளதால்.. பாஜகவே முதல்வர் பதவியை ஏற்க விரும்பும்.

இதனால் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளன. ஷிண்டே முதல்வர் பதவியை இழக்க நேரிடலாம். ஷிண்டே எதிர்த்தால்.. அவரின் கட்சி பிரிவு உடைக்கப்பட்டு வாய்ப்புகளும் உள்ளன. இதனால் மீண்டும்.,. கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து தேவேந்திர பட்னாவிஸ் அங்கே முதல்வராகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் கடந்த வாரம் ஒரே கட்டமாக நடந்தது. அங்கே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும்.

மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா: காங்கிரஸ் 19, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - 14 இடங்கள், உத்தவ் தாக்கரே சிவசேனா 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக 57 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிரா: பாஜக கூட்டணி - பாஜக 126 இடங்கள், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 35, ஷிண்டே சிவசேனா - 54 இடங்களில் முன்னிலை. பாஜக கூட்டணி மொத்தமாக 219 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தேர்தல் நிலவரம்: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 149 இடங்களில் போட்டியிட்டது. அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (ஷிண்டே பிரிவு) மற்றும் என்சிபி (அஜித் பவார் பிரிவு) ஆகியவை முறையே 81 மற்றும் 59 இடங்களில் போட்டியிட்டது

எதிர்க்கட்சிகள் தரப்பில், காங்கிரஸ் 101 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் என்சிபி (சரத் பவார் பிரிவு) முறையே 95 மற்றும் 86 இடங்களிலும் போட்டியிட்டது. மேலும், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) 17 இடங்களில் போட்டியிட்டது.

மகாராஷ்டிராவில் கடந்த 2019 அக்டோபரில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால் முதல்வரை தேர்வு செய்வதில் வந்த மோதலில் சிவசேனாவை கூட்டணியில் இருந்து வெளியேறி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து, மகா விகாஸ் அகாடி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியது. இதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற நிலையில், மகா விகாஸ் அகாடி ஆட்சி செய்தது.

ஆனால் அதன்பின் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து ஆட்சி கவிழ்ந்தது. அதோடு தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாரால் உடைந்தது. இவர்கள் பாஜக உடன் கூட்டணி வைக்க சிவசேனா ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆனது குறிப்பிடத்தக்கது.

குழப்பம்: இப்போது.. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே மகாயுதி, மகா விகாஸ் அகாடி ஆகிய 2 கூட்டணிகளில் உள்ள தலைவர்களும் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் மும்முரம் காட்டி வருவதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+