மிதுன ராசியா.! நீயெல்லாம் காதலிக்கவே லாயக்கு இல்லை.. பிரபல டேட்டிங் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
மும்பை: காதல் செட் ஆகவில்லை என டேட்டிங் செயலி பக்கம் போனால்.. அந்த டேட்டிங் செயலியும் உங்களை பிளாக் செய்தால் என்ன செய்வீர்கள்.. அப்படியொரு விஷயம் தான் மிதுன ராசிக்காரர்களுக்கு நடக்கிறதாம்.. பிரபல டேட்டிங் செயலி ஒன்று மிதுன ராசிக்காரர்களை கிட்டதட்ட தடை விதிக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பின்னணி மற்றும் காரணத்தை நாம் பார்க்கலாம்.!
டேட்டிங் உலகிலும் சில நம்பிக்கைகள் இருக்கவே செய்கிறது. அதில் ஒன்று தான் மிதுன ராசிக்காரர்களைப் பற்றியது. அதாவது மிதுன ராசி கொண்டவர்களை டேட்டிங் செய்வதும், காதலிப்பதும் அவ்வளவு ஈஸியானது இல்லை என்ற கருத்து பொதுவாகவே நிலவுகிறது. காரணம் ஏன் எனக் கேட்டால் பெரிய லிஸ்ட்டையே தருகிறார்கள்.

மிதுன ராசிக்காரர்கள்
அதாவது மிதுன ராசிக்காரர்கள் மிக ஈஸியாக சலிப்படைந்து விடுவார்களாம். மேலும், நல்லா பழகிக் கொண்டு இருப்பார்கள். திடீரென உங்களை கோஸ்ட் செய்துவிடுவார்கள். கோஸ்ட் என்றால் திடீரென பேசுவதை மொத்தமாக நிறுத்திவிடுவார்களாம். மேலும், அவர்கள் எப்போதும் இரண்டு மனநிலைகளில் இருப்பார்கள் என்றும் பலரும் கூறுகின்றனர். நீங்கள் மிதுன ராசியாக இருந்தால் உங்களைப் பற்றியே சொல்வது போலக் கூட இது இருக்கலாம்.
இந்த மிதுன ராசி விவகாரம் இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்று டேட்டிங் செயலியிலும் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாகப் பிரபல டேட்டிங் செயலி கிட்டதட்ட மிதுன ராசி கொண்டவர்களுக்கு மொத்தமாகத் தடையே விதித்துவிட்டது.. இது ஜோக் இல்லை.. உண்மைதான். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஜோக் ஆக தொடங்கியது
முதலில் இது அந்த நிறுவன ஊழியர்களிடையே ஜோக் ஆகவே தொடங்கியுள்ளது. ஆனால், பலரும் இதை ஆமோதிக்கவே உண்மையாகவே செயல்படுத்தியும் விட்டனர். சில காரணங்களால் அந்த டேட்டிங் செயலியின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட முடியாது. ஆனால், இந்த செயலியில் நீங்கள் சாதாரணமாகச் சேர்ந்துவிட முடியாது. ஆதார் கார்டுகள் மற்றும் பேக் கிரவண்டு செக் எல்லாம் தேவைப்படும். அந்தளவுக்குக் கடுமையான சோதனைக்கு பிறகே இந்த செயலியில் நீங்கள் சேரவே முடியும். பணம் கட்டினாலும் கூட இந்த சோதனைகளில் பாஸ் ஆனால் மட்டுமே சேர முடியும்.
கிட்டதட்ட பிளாக்
அந்த குறிப்பிட்ட டேட்டிங் செயலியில் தான் மிதுன ராசிக்காரர்களை மட்டும் ஃபில்டர் செய்யும் வசதியைக் கொண்டு வந்தனர். அதாவது இந்த வசதியைப் பயன்படுத்தி நீங்கள் மிதுன ராசிக்காரர்களை மட்டும் எளிதாக நீக்கிவிடலாம்.. யூசர்களின் பயன்பாட்டை ஆய்வு செய்து பார்த்ததில் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பது தெரிய வந்ததாக ஊழியர்கள் கூறுகிறார்கள்.
இது குறித்து அந்த நிறுவன ஊழியர் கூறுகையில், "எங்கள் செயலி வழக்கமான டேட்டிங் செயலி இல்லை. குறுகிய உரையாடல்கள் மற்றும் தேவையற்ற ஸ்வைப்பிங் இருக்காது.. நேரடியான மற்றும் எளிமையான பிளானிங் மட்டுமே இருக்கும்.. இதில் நீங்கள் காதலைத் தேடலாம்.. நண்பர்களைச் சந்திக்கலாம்.. ஒருவரை நேருக்கு நேர் சந்திக்க வைப்பதே எங்கள் நோக்கம். நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகே யாராவது இருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடித்து அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே எங்கள் நோக்கம்.
நல்ல வரவேற்பு
நாங்கள் பேசும்போது ஒரு ஜோக்காகவே இது தொடங்கியது.. ஆனால் காலப்போக்கில், மிதுன ராசிக்காரர்கள் மட்டும் நட்பு ரிலேஷன்ஷிப் என எல்லாவற்றிலும் பிரச்சினையைச் சந்தித்து வருவதை நாங்கள் கவனித்தோம். இதன் காரணமாகவே டேட்டாக்களை அடிப்படையாக வைத்து மிதுன ராசிக்காரர்களை ஃபில்டர் செய்யும் அம்சத்தைக் கொண்டு வந்தோம்.. இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது" என்றார்.
இப்போது அந்த ஃபில்டர் நீக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், இதை மீண்டும் கொண்டு வரவே பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். நீங்கள் சொல்லுங்கள்.. மிதுன ராசிக்காரர்களை டேட்டிங் செய்வது உண்மையாகவே கஷ்டம் தானா?












Click it and Unblock the Notifications