பாராமதியில் வெற்றிக்கொடி நாட்டும் அஜித் பவார்! கத்துக்குட்டியை களமிறக்கி பாடம் கற்றது சரத் பவார் அணி
மும்பை: பாராமதி தொகுதியில் தொடர்ந்த 7 முறை டபுள் ஹாட்ரிக் வெற்றி பெற்ற அஜித் பவாரை எதிர்த்து, சரத் பவார் சார்பில் 32 வயதான யுகேந்திர பவார் களமிறக்கப்பட்டார். இந்த தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்துடன் அஜித் பவார் வெற்றி பெற்று இருக்கிறார்.
கடந்த 1999ம் ஆண்டு தொடங்கி கடந்த 2019 தேர்தல் வரை தேசியவாத காங்கிரஸ் இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. அஜித் பவார் 1991லிருந்து இந்த தொகுதியில் வென்று வந்திருக்கிறார். ஆனால் இந்த முறை வெற்றி யார் பக்கம் இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது. காரணம் தேசியவாத காங்கிரஸின் பிரிவுதான். பாஜவுக்கு எதிராக கூட்டணி ஆட்சியை இக்கட்சி அமைத்திருந்த நேரம் பார்த்து, அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கட்சியிலிருந்து விலகினார். மட்டுமல்லாது தேசியவாத காங்கிரஸ் தனக்கு தான் சொந்தம் என்றும் கோரியிருந்தார். பின்னர் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் எனும் அணி உருவாக்கப்பட்டது.

இந்த அணி பாஜகவுக்கு ஆதரவளிக்க, பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இது சரத் பவாருக்கு பிடிக்கவில்லை. தான் உருவாக்கிய கட்சியை உடைத்ததற்காக அஜித் பவார் மீது செம கடுப்பில் இருக்கிறார். கட்சி உடைந்த பின்னர் முதல் முறையாக இரு அணிகளும் லோக்சபா தேர்தலை எதிர்கொண்டன. பாரமதி லோக்சபா தொகுதியில் அஜித் பவார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சரத் பவார் தனது மகள் சுப்ரியா சுலேவை களம் இறக்கினார்.
பாரமதி என்பது சரத் பவார் பிறந்த ஊர். 1967 முதல் 1990 வரை இங்கு அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறார். ஆனால் தேர்தலுக்காக இவர் இந்த தொகுதியில் அதிகம் பிரசாரம் செய்ய மாட்டார். இதுதான் இவருடைய பாணி. தொடக்கத்தில் ஒரு போதுக்கூட்டம், இறுதியில் ஒரு பேரணி என இரண்டு பிரசாரங்களில் மட்டுமே பங்கேற்பார். மற்ற நாட்களில் மாநிலம் முழுவதும் கட்சிக்காக பம்பரமாக சுழன்று பரப்புரை மேற்கொள்வார். இருப்பினும் சொந்த தொகுதி மக்கள் இவரை ஒரு நாளும் கை விட்டதில்லை.
தனக்கு பின்னர் அஜித் பவாரை தன் தொகுதி மக்களுக்கு இவர் கை காட்டியிருந்தார். அவருக்கும் கூட சரத் பவார் அதிகம் பிரசாரம் செய்ய மாட்டார். ஆனாலும் மக்கள் இவர் கை காட்டிய அஜித் பவாரை வெற்றி பெற வைத்தனர்.
அந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போதுதான் கட்சி இரண்டாக உடைந்துவிட்டதே. எனவே, சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் தனது மகள் சுப்ரியாவுக்காக சுழன்று சுழன்று பிரசாரம் செய்தார். எதிர்பார்த்ததை போல சுப்ரியா வெற்றியும் பெற்றுவிட்டார். இது அஜித் பவாருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கல். எனவே இதனை ஈடு செய்ய சட்டமன்ற தேர்தலிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று அஜித் பவார் வைராக்கியத்தோடு களம் இறங்கியுள்ளார்.
ஆனால் அவருக்கு எதிராக அவரது சொந்த அண்ண மகன் யுகேந்திர பாவரை, சரத் பவார் போட்டியிட வைத்திருக்கிறார். 32 வயதான யுகேந்திர பவார், ஏற்கெனவே லோக்சபா தேர்தலில் சுப்ரியாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்திருக்கிறார். அந்த வகையிலும், சரத் பவாரின் பேரன் என்கிற வகையிலும் யுகேந்திராவுக்கு செல்வாக்கு இருக்கிறது. ஆனால் இந்த செல்வாக்கு தேர்தல் வெற்றியை பெற்று தருமா? என்பது கேள்விக்குறியாக இருந்தது.
மதியம் 2.30 நிலவரப்படி, மொத்தம் 14 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டிருந்தன. அப்போதே 72,809 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் பவார் முன்னணியில் இருந்தார். தற்போது ரிசல்ட் முழுவதுமாக வந்திருக்கிறது. அதன்படி 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் பவார் வெற்றி பெற்றிருக்கிறார். யுகேந்திர பவார் எனும் கத்துக்குட்டியை இறக்கி சரத் பவார் அணி தக்க பாடம் கற்றுக்கொண்டது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications