விளையாட்டுக்கு அளவே இல்லையா.. தீவிரவாதி போல ஆக்ட் கொடுத்தவரிடம் கிடுக்கி பிடி விசாரணை
தீவிரவாதி போல நடித்து ஏமாற்றிய இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
மும்பை: மும்பை தாக்குதல் நடந்த நாளை நினைச்சு ஏற்கனவே உலக நாடுகள் நடுங்கி கொண்டிருக்கிறது. இதில் ஒருவர் இன்னும் கொஞ்சம் பீதியையும், அச்சத்தையும் அள்ளி தெளித்துள்ளார்.
மும்பையில் இருந்து கொல்கத்தா பகுஹூவாத்திக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று கிளம்பியது. அந்த விமானத்தில் 21 வயசு இளைஞன் ஒருவர் அதில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
பிறகு திடீரென தன் முகத்தை கர்சீப்பால் கட்டிக் கொண்டார். தன் செல்போனில் ஒரு செல்பியும் எடுத்து கொண்டார்.

நான் தீவிரவாதி...
அடுத்த செகண்ட் அந்த போட்டோக்களை தனது நண்பர்கள் 6 பேருக்கு அனுப்பியும் வைத்துவிட்டார். வெறும் செல்பியோடு அனுப்பி விட்டிருந்தால்கூட பரவாயில்லையே... அதில் "நான் விமானத்தில் தீவிரவாதி.. பெண்களின் இதயத்தை நான் காலி செய்துவிட்டேன்" என்று ஒரு தலைப்பும் போட்டு அனுப்பிவிட்டார்.

பயந்த நபர்
இதனை பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தவர் பார்த்துவிட்டார். சின்ன வயசு ஆள்... முகத்தில் கர்சீப்.. போட்டோ.. தீவிரவாதி.. இப்படியெல்லாம் பார்த்துவிட்டு பக்கத்து சீட்காரருக்கு பயம் வந்து விட்டது.

விசாரணை தீவிரம்
உடனே அங்கிருந்த சிஐஎஸ்எஃப் அதாவது மத்திய தொழில் பாதுகாப்பு படைப் பிரிவினரிடம் போய் சொல்லி விட்டார். அவர்களும் உடனடியாக விரைந்து வந்து இளைஞரை பிடித்து விசாரணை, பரிசோதனை என்று இறங்கி விட்டார்கள். இதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏர்போர்ட் டென்ஷன்
இன்னையோட 10 வருஷம் ஆச்சு.. மும்பையில் அந்த பயங்கரம் நடந்து முடிந்து!! இதே தினத்தில், அதே மும்பையில் இப்படி தீவிரவாத தகவல் அங்கிருந்தவர் உட்பட ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்து டென்ஷன் ஆக்கிவிட்டது!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications