"மக்களின் நண்பன்".. ரூ.3 லட்சம்.. சொந்த செலவில் சாலை சீரமைத்த போலீஸ்காரர்.. குவியும் பாராட்டு
சொந்த செலவில் சாலையை சீரமைத்த போலீஸ்காரருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது
மைசூர்: ரோடு சரியில்லை என்பதற்காக, ஒரு போலீஸ்காரர் தன்னுடைய சொந்த பணம் 3 லட்சம் ரூபாயை செலவழித்து சீர் செய்துள்ளார்.. அவர் பெயர் எஸ்.துரைசுவாமி.
மைசூர் எச்டி கோடே தாலுகாவில் மிக புகழ்பெற்ற கோவில் சிக்காதேவம்மா கோயில்... இந்த கோயிலை இணைக்கும் சாலையானது, மடபுராவிற்கும் கே.பெலட்டூருக்கும் நடுவில் உள்ளது.
இந்த சாலையில் கிட்டத்தட்ட 5 கிமீ தொலைவுக்கு வாகன ஓட்டிகளால் வண்டிகளை ஓட்டி செல்ல முடிவதில்லை.. குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.. நிறைய நேரம் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

கோரிக்கை
இந்த சாலையை சீரமைக்க கோரி, அந்த பகுதி மக்கள் ஏராளமான கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தந்திருக்கிறார்கள்... ஆனால், இதுவரை அவர்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.. அதனால், பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள், எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று உதவி துணை ஆய்வாளர் எஸ். துரைசாமியிடம் கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் நண்பன்
இந்த பகுதியில் துரைசாமி ரொம்பவும் ஃபேமஸ்.. ஏற்கனவே நிறைய பிரச்சனைகளை இவர் சமரசமாக தீர்த்து வைத்துள்ளார்.. அந்த பகுதி மக்களுக்கு தன்னால் ஆன உதவிகளையும் செய்துள்ளார்.. அதனால், இவரை மக்களின் நண்பன் என்று அழைப்பார்களாம்.. எச்.டி. கோடே ஸ்டேஷனில் வேலை பார்த்து வருகிறார் துரைசுவாமி.. இப்போது சாலை சீரமைப்பது தொடர்பாக மனு வந்ததால், தானே நேரடியாக களம் இறங்கினார் துரைசுவாமி.

சந்திரிகா
தன்னுடைய சொந்த செலவிலேயே ரூ.3 லட்சத்தை ரக்ஷனா சேவா அறக்கட்டளைக்கு, மனைவி சந்திரிகாவுடன் வழங்கினார்... இதையடுத்து அந்த சாலை சரி செய்யும் பணி ஆரம்பமானது.. சாலை முழுவதுமாக சரி செய்யும் வரை அங்கேயே அந்த தொழிலாளர்களுக்கு உதவிகளை செய்து கொண்டிருந்தார் துரைசுவாமி..

விபத்துக்கள்
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் துரைசுவாமி சொல்லும்போது,
"30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர்.. ஆனால், இந்த சாலையில் நிறைய விபத்துக்கள் நடந்துள்ளன... அதில் பலர் காயமடைந்துள்ளனர்.. இதனால், இந்த பகுதி மக்கள் இதுகுறித்து சொன்னார்கள்.. சில ஆம்புலன்ஸ் டிரைவர்களும் இந்த சாலையில் உள்ள ஆபத்துகளை என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அதனால்தான் சீரமைக்க உடனடியாக இறங்கினோம்"' என்றார்.

சபாஷ்
துரைசுவாமிக்கு இப்போது பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.. பல வருடமாகவே, பல சமூகம் சார்ந்த விஷயங்களை துரைசுவாமி செய்து வருகிறாராம்.. ஏற்கனவே இதுபோலவே இன்னொரு சாலையையும் சொந்த காசு செலவழித்து சீரமைத்து தந்துள்ளாராம்.. ஆதரவற்ற 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறாராம்.. காவல்துறை நண்பன் என்பதற்கு பதில் மக்களின் நண்பன் என்று ஒரு போலீஸ்காரரை உள்ளூர் மக்கள் அழைத்து வருவது வியப்பை தந்து வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications