பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட்டான நாடியா சாங்?.. நெட்டிசன்கள் எதிர்பார்த்தது மிஸ்ஸிங்?
சென்னை: மலேசியா வாழ் தமிழரும் நடிகையுமான நாடியா சாங் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் வெளிநாடு வாழ் தமிழர்களை ஈர்க்கும் விதமாக வெளிநாடு வாழ் தமிழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்த சீசனில் நாடியா சாங் என்ற மலேசியா வாழ் தமிழர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவர் ஆரம்பத்தில் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த காரணத்தினால் இவர்தான் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்படுவார் என சொல்லப்பட்டது.

கதை சொல்லும் டாஸ்க்
ஆனால் கதை சொல்லும் டாஸ்கில் இவர் தனது ஸ்டிக்ரிட்டான தாய் குறித்து கூறிய கதையால் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் தனது கணவர் குறித்து அவர் கூறிய கருத்துகளால் அவரது கணவர் சாங் சூன் ஹுவாத் யார் என இணையதளத்தில் தேடும் அளவுக்கு தனது கணவருக்கு புகழை தேடி தந்தார் நாடியா.

பிக்பாஸ் 5 போட்டியாளர்கள்
பேச்சில் இருந்த அமைதி உள்ளிட்டவற்றால் இவர் பிக்பாஸில் 5 போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என சொல்லப்பட்டது. ஆனால் இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் நாமினேஷில் மொத்தமுள்ள 17 பேரில் தாமரைச் செல்வி மற்றும் பாவனியை தவிர்த்து மற்ற 15 பேரும் நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.

நிகழ்ச்சி
அந்த வகையில் வழக்கம் போல் இன்றைய நிகழ்ச்சி நேற்றே படமாக்கப்பட்டது. இதில் நாமினேஷலில் இருந்த பிரியங்கா தேஷ் பாண்டே, இமான் அண்ணாச்சி , சுருதி, அக்ஷரா ரெட்டி, ராஜு, அபினய், ஐக்கி பெரி, மதுமிதா, நிரூப், வருண் ஆகிய 10 போட்டியாளர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் மக்கள் வாக்குபடி ஐக்கி பெரி, நாடியா சாங் ஆகிய இருவரில் ஒருவர் காப்பாற்றப்பட்டு மற்றொருவர் எலிமினேட் செய்யப்படுவர் என சொல்லப்பட்டது.

நாடியா சாங் எவிக்ஷன்
இந்த இருவரில் ஐக்கி பெரி காப்பாற்றப்பட்டு நாடியா சாங் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நெட்டிசன்கள் கூறுகையில் சின்னப்பொண்ணு வெளியேறுவார்கள் என நினைத்தோமே, அவரது பெயர் கெட்டு போய் தான்வெளியே வருவாங்கன்னு நெனச்சேன். இந்த வாரமே வெளியே வந்தது நல்லதுதான். விதியாரை விட்டது என்கிறார்கள்.

நாடியா கன்டென்ட்
ஐயோ அபிஷேக் காப்பாற்றப்பட்டாரா, நாடியா போக போக நல்லா கன்டென்ட் கொடுப்பாங்கன்னு பார்த்தால் முதலில் எவிக்ட் ஆகிவிட்டாரே என்கிறார்கள். நாடியா எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதவர் என நெட்டிசன்கள் கூறுகிறார்கள். நாடியா வெளியேறியதாக கூறிய நிகழ்ச்சி இன்றைய தினம் ஒளிபரப்பாகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications