19 வயசு கவுசல்யா.. காதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட 35 வயசு புதுமாப்பிள்ளை பாக்யராஜ்

நாகை அருகே மனைவி காதலனுடன் ஓடியதால் கணவன் தற்கொலை செய்தார்

Subscribe to Oneindia Tamil

நாகை: மனைவி தன்னை விட்டு இன்னொருவருடன் ஓடிவிட்டதால், புது மாப்பிள்ளை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகை மாவட்டம் நாகூரை அடுத்துள்ள பகுதியை சேர்ந்த விவசாயி பாக்யராஜ். இவருக்கு 35 வயதாகிறது. இவருக்கும் திருவாரூர் மாவட்டம் நாககுடி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா என்ற 19 வயது பெண்ணுக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்புதான் கல்யாணம் ஆனது.

35 year old bride groom suicide near Nagai

ஆனால் கல்யாணத்துக்கு முன்பே கவுசல்யாவும், வேறு ஒரு இளைஞரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள். ஆனால் லவ் மேட்டர் வீட்டில் தெரியவும், கவுசல்யாவுக்கு வேறு இடத்தில் அவசர அவசரமாக பாக்யராஜ் என்ற மாப்பிள்ளையை பார்த்து கட்டிவைக்க முயன்றனர்.

கவுசல்யா எவ்வளவோ சொல்லி பார்த்தும், வீட்டில் காதலுக்கு பெற்றோர் ஒத்து கொள்ளவில்லை. பாக்யராஜை பிடிக்கவில்லை என்று சொல்லியும் பெற்றோர் கேட்கவில்லை. இதையடுத்து கட்டாயமாக திருமணத்தை செய்து வைத்தனர்.

இந்த நேரத்தில் ஆடி மாசம் ஆரம்பித்ததும், மாப்பிள்ளை வீட்டில் இருந்து கவுசல்யாவை அம்மா வீட்டுக்கு அழைத்து சென்று விட்டு வந்துள்ளனர். அந்த சமயத்தில் கவுசல்யா காதலனை சந்தித்து பேசி அழுதுள்ளார். இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்து, யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டே ஓடி விட்டனர்.

கட்டின மனைவி காதலனுடன் ஓடிப்போனதை அறிந்த பாக்யராஜ் மிகுந்த வேதனையும் அவமானமும் அடைந்தார். அதனால் வயலில் தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நாகூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+